K U M U D A M   N E W S

Chennai

அரசுக்கு எதிராக குவிந்த விளையாட்டு வீரர்கள்... காரணம் என்ன..?

சென்னை சைதாப்பேட்டை அம்மா பூங்கா உள்ளிட்ட 9 இடங்களில் உள்ள கால்பந்து திடல்களை தனியார் மயமாக்க முடிவெடுத்து மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்நிலையில் இதற்கு கால்பந்து விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து சைதாப்பேட்டையில் உள்ள அம்மா பூங்கா முன்பு போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அம்மாடியோவ் தங்கம் விலையா இது? - "அவ்வளவுதான் முடிச்சு விட்டாங்க..."

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.59,000க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.7,375க்கு விற்பனையாகிறது.

பயணிகள் கவனத்திற்கு..!! ராக்கெட் வேகத்தில் எகிறிய டிக்கெட் கட்டணம்.!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களின் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சாதாரண நாட்களில் சென்னை - மதுரை விமான கட்டணம் ரூ.4,300 ஆக இருக்கும் நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு ரூ.11,749 முதல் ரூ.17,745 வரை உயர்ந்துள்ளது.

சென்னை மக்களுக்கு Happy News..! 14 மாதங்களுக்கு பிறகு சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே ரயில் சேவை தொடக்கம்

சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே 14 மாதங்களுக்குப் பிறகு பறக்கும் ரயில் சேவை தொடங்கியது. 2 மார்க்கங்களிலும் தலா 45 ரயில் சேவைகள்  இன்று முதல் இயக்கப்பட உள்ளன. 

களைகட்டும் தீபாவளி ஷாப்பிங்... கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

தியாகராயநகர் உட்பட சென்னையின் பல பகுதிகளிலும் தீபாவளி விற்பனை களைகட்டியுள்ளது. கடை வீதிகளில் புத்தாடை, இனிப்புகள், பட்டாசுகள் வாங்க மக்கள் அதிகளவில் கூடியதால் நெரிசல் மிகுதியாக காணப்படுகிறது.

Metro Rail Diwali Bonus: சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு முதல் முறையாக தீபாவளி போனஸ்!

சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு முதல் முறையாக தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, Non Executive பணியாளர்களுக்கு 15,000 ரூபாய் போனஸ் வழங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னை நோக்கி வந்த விமானங்கள்... திடீரென வந்த மிரட்டல்... விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை நோக்கி வந்த 3 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அரசுப்பேருந்தில் ஏற்பட்ட திடீர் விபத்து... நடுவழியில் தவித்த பயணிகள்

சென்னை எழும்பூரில் சாலையில் சென்றுகொண்டிருந்த அரசுப்பேருந்தின் பக்கவாட்டு பகுதி சரிந்து விழுந்தது. நீண்ட நேரம் போராடியும் சரிசெய்ய முடியாததால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

லாட்டரி அதிபர் மார்டின் முறைகேடு வழக்கு... விசாரணையை தொடர அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

லாட்டரி அதிபர் மார்டினுக்கு எதிரான முறைகேடு வழக்கை முடித்து வைத்த நீதிமன்றத்தின் உத்தரவு சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், இந்த விசாரணையை அமலாக்கத்துறை தொடர வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Diwali Special Bus: தீபாவளிக்கு சொந்த ஊர் போகணுமா..? சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் ரெடி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.