K U M U D A M   N E W S

CCTV

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=325&order=created_at&post_tags=cctv

பட்டப்பகலில் நகைகள் கொள்ளை - பகீர் வீடியோ வெளியீடு

கோவை ஆர்.எஸ் புரம் கிழக்கு சம்பந்தம் சாலையில் உணவக உரிமையாளர் வீட்டில் 60 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. பட்டப்பகலில் 2 பேர் ஹெல்மெட் அணிந்து வந்து கொள்ளையடித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

நொடியில் நடந்த சம்பவம்... துடிதுடித்து பலியான பெண்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் நிகழ்ந்த சாலை விபத்தில் ராதா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனோ மகன்கள் சரமாரியாக தாக்கிய வழக்கு.. காவல்துறை அதிரடி நடவடிக்கை

பாடகர் மனோவின் மகன்களை தாக்கிய வழக்கில் மனோவின் மனைவி ஜமீலா அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டு நபர்கள் கைது செய்துள்ளனர்.

மனைவியை கடத்திய கணவன்.. வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி

சென்னை சித்திலப்பாக்கம் பகுதியில் மனைவியை ஆள் வைத்து கடத்திய கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு பேருந்து சாலை தடுப்பில் மோதி பயங்கர விபத்து - பதைபதைக்க வைக்கும் காட்சி

வேலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி அரசு பேருந்து விபத்துக்குள்ளானது. அரசு பேருந்து சாலை தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.

மனோ மகன்களுக்கு தர்ம அடி... அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்... குற்றவாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு!

தன் மகன்கள் மீதும், தன் மீதும் 10 க்கும் மேற்பட்டோர்கள் தாக்குதல் நடத்தியதாக பாடகர் மனோவின் மனைவி ஜமீலா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் குற்றவாளிகளைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மகன்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.. பாடகர் மனோவின் மனைவி உருக்கம்

தாக்குதல் விவகாரத்தால் ஏற்பட்ட அசிங்கத்தில் தனது மகன்கள் எங்கு சென்றார்கள் என்றே தெரியவில்லை எனவும், இனியாவது அவர்கள் நேரில் வரவேண்டும் எனவும் பாடகர் மனோவின் மனைவி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை... புதிய சிசிடிவி காட்சி வெளியீடு... எதிர்க்கட்சி கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி?

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்து விட்டு கொலையாளிகள் தப்பிச் செல்லும் முதல் சிசிடிவி காட்சிகள் முன்பு வெளியாகி இருந்தது. ஆனால் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களும், சிசிடிவி காட்சிகளில் பதிவானவர்களும் வேறு மாதிரி இருப்பதாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.