K U M U D A M   N E W S

புஷ்பா-2 விவகாரம்.. 4 மணிநேரம் விசாரணை.. என்ன சொன்னார் அல்லு அர்ஜுன்?

'புஷ்பா-2' திரைப்படத்தின் பிரீமியர் காட்சி திரையிடலின் போது பெண் உயிரிழந்தது தொடர்பாக  நடிகர் அல்லு அர்ஜுனிடம் காவல்துறையினர் நான்கு மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர்.

’அது வேற வாய், இது வேற வாய்’.. மாற்றி மாற்றி பேசும் தவெகவினர்.. தலைவலியில் விஜய்

அரியலூரில் பெண்களுக்கு மரியாதை இல்லை எனக்கூறி டிசம்பர் 22ம் தேதி கட்சியில் இருந்து விலகுவதாக கூறிய பெண் நிர்வாகி, இன்று மீண்டும் கட்சி கொடியை ஏற்றும் விழாவில் பங்கெற்றுள்ளார். தவெக கட்சிக்கு ஒரு கும்பிடு எனக்கூறிவிட்டு, நான் அப்படி சொல்லவே இல்லையே என அப்பெண் நிர்வாகி மாற்றி கூறியுள்ள அந்தர்பல்டி சம்பவத்தை விலக்குகிறது இந்த தொகுப்பு...

நடுக்கடலில் 17 பேர் அதிரடி கைது..! - என்ன நடந்தது..?

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையால் கைது

டயர் வெடித்து அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் – வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

கர்நாடகா, உடுப்பியில் காற்று நிரப்பும் போது டயர் வெடித்து தூக்கி வீசப்பட்ட இளைஞர்

தேர்தல் சட்டத்திருத்தம் - முதல்வர் எதிர்ப்பு

நாட்டில் சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதற்கு பாஜக தலைமையில் அங்கம் வகிக்கக் கூடிய கட்சிகளும் முன்வர வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

ரஜினியுடன் இணைந்து பணியாற்ற ஆசை.. இளையராஜாவுக்கு எந்த அவமதிப்பும் நடக்கவில்லை- தேவா

ஆண்டாள் கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எந்த விதமான அவமதிப்பும் நடைபெறவில்லை என்றும் அதனை அவரும் கூறியிருந்தார் என்று இசையமைப்பாளர் தேவா கூறியுள்ளார்.

அல்லு அர்ஜூன் வீட்டின் மீது தாக்குதல்

ஹைதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதல் நடத்தினர்.

பெண் உயிரிழந்த விவகாரம்.. அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டில் நுழைந்த போராட்டக்காரர்கள் பூந்தொட்டிகளை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா கடவுளின் தேசம்.. தமிழகம் குப்பைகளின் தேசமா? - சீமான் ஆவேசம்

என் நாட்டின் வளங்களை கேரளாவிற்கு எடுத்து சென்று விட்டு அங்குள்ள குப்பைகளை இங்கு கொட்டுவீர்களா என சீமான் ஆவேசமாக பேசினார்.

தலைக்கேறிய குடி போதை.. பல்டி அடித்த காஸ்ட்லி கார்

ஈரோடு, செங்கோடம்பாளையத்தில் நள்ளிரவில் சொகுசு கார் தாறுமாறாக ஓடி விபத்து ஏற்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல்.. உட்கட்சியிலேயே இரட்டை நிலைபாடு? - திட்டத்தை எதிர்க்கும் எம்.பிக்கள்?

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 2023-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட உயர்நிலைக் குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கையை வைத்து ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை பாஜக வரையறுத்தது.

மனித நேயமற்றவர்.. தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது.. அல்லு அர்ஜுன் வேதனை

’புஷ்பா-2’ திரைப்பட வெளியீட்டின் போது தான் வந்தது குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

அஜித்துடன் இணைந்த நடிகை ரம்யா.. வைரலாகும் போஸ்டர்

அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடிகை ரம்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

இதுக்கு ஒரு எண்டே இல்லையா..? உதவித்தொகைக்கு ஆசைப்பட்டு நடந்த மோசடி

உத்திரப்பிரதேசத்தில் திருமண உதவித்தொகைக்கு ஆசைப்பட்டு சகோதரன் -சகோதரி, மாமனார்- மருமகள் திருமணம் செய்ய விண்ணபித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

என்னவா இருக்கும்..! மர்ம பொருளால் அதிர்ந்த பாஜக அலுவலகம்

டெல்லியில் உள்ள பாஜக அலுவலக வளாகத்தின் வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம பையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் செளதாலா மாரடைப்பால் காலமானார்

ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக் தளத்தின்  தலைவருமான  ஓம் பிரகாஷ் செளதாலா இன்று காலமானார். 

‘விடுதலை -2’ திரைப்படத்தை இதில் வெளியிடக் கூடாது.. நீதிமன்றம் வைத்த செக்

'விடுதலை 2’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெயிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாஞ்சோலை விவகாரம்.. தமிழ்நாடு அரசு அணுகுமுறை நேர்மையாக இல்லை.. கிருஷ்ணசாமி காட்டம்

மாஞ்சோலை மக்களின் உண்மையான பிரச்சனையை தமிழ்நாடு அரசு முறையாக அணுகவில்லை என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அதிருப்தி தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் தள்ளு முள்ளு.. பாஜக எம்.பி காயம்.. ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் காங்கிரஸாருக்கும் பாஜகவிற்கும் ஏற்பட்ட தள்ளு முள்ளில் பாஜக எம்.பி பிரதாப் சாரங்கி தலையில் காயம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உன்னால தான் என் வாழ்க்கை போச்சு.. பட்டப்பகலில் வங்கி ஊழியரை தாக்கிய நபர்

சென்னை தியாகராய நகர் பர்கிட் சாலையில் உள்ள தனியார் வங்கியில் பணிப்புரியும் ஊழியரை தனிநபர் ஒருவர் கத்தியால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

9 மாவட்டங்களை குறி வச்ச கனமழை..எப்போது தெரியுமா?

ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுவன்.. இரு உயிரை பலி வாங்கிய புஷ்பா 2?

’புஷ்பா -2’ திரைப்படத்தின் பிரீமியர் காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸின் இருண்ட வரலாறு அம்பலம்.. அமித்ஷாவிற்கு மோடி ஆதரவு

அம்பேத்கர் குறித்து அமித்ஷா சர்ச்சை கருத்து பேசிய நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளப் பக்கத்தில் பதிவுகளை பகிர்ந்துள்ளார்.

அம்பேத்கர் பெயரை தான் சொல்வோம்.. கிளம்பிய எதிர்ப்பு.. விழிபிதுங்கிய அமித்ஷா

அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த சர்ச்சை கருத்திற்கு தமிழக கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அம்பேத்கர் குறித்து பேசுவது ஃபேஷனாகிவிட்டது.. அமித்ஷா கருத்து.. வெடித்த பிரளயம்

மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசிய சர்ச்சை கருத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.