K U M U D A M   N E W S

ar

ரபாடா, மஹாராஜ் அபாரம்.. சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்.. தொடரை கைப்பற்றியது தெ.ஆப்பிரிக்கா

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியது.

வயநாடு நிலச்சரிவு: ரூ.2 கோடி நிவாரண நிதி வழங்கிய லாட்டரி அதிபரின் நிறுவனம்!

பல்வேறு நடிகர்களும் வயநாடு மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர். நடிகரும் மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ரூ.25 லட்சம் நிவாரண நிதி அளித்தார். நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, கார்த்தி இணைந்து ரூ.50 லட்சத்தை கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கினார்கள்.

இன்று மாலை வீடு திரும்புகிறார் பாடகி பி.சுசீலா.... உறவினர்கள் தகவல்!

பிரபல திரைப்படப் பின்னணி பாடகி பி.சுசீலா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை வீடு திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

'இந்திய அரசியலின் ஆளுமை'.. கலைஞர் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி!

''தமிழ்நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றத்தில் கருணாநிதி எப்போதும் ஆர்வம் கொண்டிருந்தார். தமிழ்நாட்டு மக்களால் பலமுறை தேந்தெடுக்கப்பட்ட கருணாநிதி ஒரு அரசியல் தலைவராக, முதலமைச்சராக இந்திய வரலாற்றில் தனக்கென தனி முத்திரையை பதித்துள்ளார்'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

விஜய் ரசிகர்களை தூக்கி சாப்பிட்ட கூகுள் இந்தியா! ட்ரெண்டிங்கில் ‘கோட்’

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ‘கோட்’ படம் குறித்த கூகுள் இந்தியாவின் பதிவு வைரலாகிறது.

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... உங்க ஊரு இந்த லிஸ்டில் இருக்கா?

தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 18) 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது வரை குரங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை; மத்திய சுகாதாரத்துறை

தற்போது வரை இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை என மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

கருணாநிதி நினைவு நாணயத்தை இன்று வெளியிடுகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 18) அவரது பெயரில் ரூ. 100 நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை கலைவாணர் அரங்கத்தில் வெளியிடுகிறார்.

யுவன் சங்கர் ராஜா மீது சென்னை போலீசில் புகார்.. என்ன விஷயம்?

''கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து தற்போது வரை ஸ்டுடியோ வாடகை கட்டணமான ரூ.20 லட்சத்தை செலுத்தவில்லை. ஆனால் வாடகை பணத்தை செலுத்தாமல், எங்களிடம் ஏதும் தெரிவிக்காமல் யுவன் சங்கர் ராஜா ஸ்டுடியோவை காலி செய்ய முயன்று வருகிறார்'' என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.

“இளம் பெண் மருத்துவருக்கு நடந்த சம்பவம் திகிலூட்டுகிறது” - வாஷிங்டன் சுந்தர்

கொல்கத்தாவில் பணியில் இருந்த இளம் மருத்துவருக்கு நடந்த சம்பவம் திகிலூட்டுகிறது என்று கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் கண்டனம் தெரிவித்துள்ளார்.