K U M U D A M   N E W S

ar

#BREAKING | அமைச்சர் உதயநிதியுடன் செந்தில் பாலாஜி சந்திப்பு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்துள்ளார் செந்தில் பாலாஜி. இந்த சந்த்பிப்பு குறித்து, ”பாசிஸ்ட்டுகளின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக, அண்ணன் செந்தில் பாலாஜிக்கு, உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையில், 471 நாட்கள் சிறைவாசம் முடித்து, வெளியே வந்திருக்கும் அவரை இன்று நேரில் சந்தித்து வரவேற்றோம். அவரது பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம்!” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Ajith: மீண்டும் கார் ரேஸுக்கு ரெடியான அஜித்... Ferrari-ல் டெரர் அவதாரம்... வைரலாகும் போட்டோஸ்!

விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களில் நடித்து வரும் அஜித், மீண்டும் கார் ரேஸில் பங்கேற்க முடிவு செய்துள்ளார். கடந்த சில தினங்களாக இதுதொடர்பான செய்திகள் வெளிவந்த நிலையில், தற்போது செம மாஸ்ஸான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Jio Recharge Plan : ஜியோ அதிரடி ரீசார்ஜ் பிளான்... அன்லிமிடட் டேட்டா பெற சூப்பர் திட்டம்!

Reliance Jio New Recharge Plan 2024 in Tamil : வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்வதற்காக ஜியோ நிறுவனம் தற்போது அடிரடியான ரீசார்ஜ் பிளான்களைக் களமிறக்கியுள்ளது.

Jayam Ravi: “தனியா அக்கவுண்ட் கிடையாது... எனக்கு மரியாதையே இல்ல..” டென்ஷனான ஜெயம் ரவி!

தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக நடிகர் ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டிருந்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடமும் அவர் மனம் திறந்து பேசியிருந்த நிலையில், மனைவி ஆர்த்தி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

'அச்சுறுத்தலான பள்ளிக் கட்டடங்களை அகற்றுக’ - அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

ராமநாதபுரம் - திருவாடனை தாலுகா தொண்டியில் உள்ள தொடக்கப் பள்ளியை இடித்து அப்புறப்படுத்தக்கோரி உச்சநீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பள்ளி கட்டிடத்தை 12 வாரத்திற்குள் இடித்து அப்புறப்படுத்தி புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சிறையிலிருந்து வந்தால் தியாகியாம்... இதுல ஓடி ஓடி செல்பி வேற.... தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

Senthil Balaji : "பொய் வழக்கில் இருந்து விடுதலை ஆவேன் என்று சொல்கிறார். செந்தில் பாலாஜி யாரை சொல்கிறார்? பொய் வழக்கு போட்டது தமிழக முதலமைச்சர் என்று சொல்கிறாரா?" என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Lipstick Issue : கொசுக்கடி முக்கியமா? இல்லை லிப்ஸ்டிக் பிரச்சனை முக்கியமா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளாசல்!

Jayakumar About Lipstick Issue : கமிஷன் பிரச்சனையும், லிப்ஸ்டிக் பிரச்சனையும் நடந்து கொண்டிருக்கும் சென்னை மாநகராட்சியில் கொசுத் தொல்லை, மழைநீர் தேக்கம் என சென்னையில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை மேயரும், துணைமேயரும் கண்டு கொள்ளவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

Meiyazhagan Public Review : “அன்பே சிவம் அப்டேட் வெர்ஷன்..” கார்த்தியின் மெய்யழகன் பப்ளிக் விமர்சனம்!

Meiyazhagan Movie Public Review in Tamil : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

முதல்வராக சொன்னேன், பிரதமராக கேட்டார்.. மோடியை சந்தித்த பின் ஸ்டாலின் விளக்கம்

CM MK Stalin Met PM Narendra Modi : டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

Porn Star Riya Barde : இந்தியாவில் கைதான வங்கதேச ஆபாச பட நடிகை... யார் இந்த ரியா பார்டே..?

Porn Star Riya Barde Arrested in India : வங்கதேச ஆபாச பட நடிகை ரியா பார்டே இந்தியாவில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.