Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 28-09-2024
இன்றைய முக்கிய நிகழ்வுகளுக்கான செய்தி தொகுப்பை இங்கே காணலாம்.
இன்றைய முக்கிய நிகழ்வுகளுக்கான செய்தி தொகுப்பை இங்கே காணலாம்.
Today Headlines: 10 மணி தலைப்புச் செய்திகள் | 10 PM Headlines Tamil
இயற்கை வேளாண்மைக்காக பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் (109) வயது முதிர்வு காரணமாக காலமானார்
முடா முறைகேடு வழக்கில் சித்தராமையா மனைவி, மருமகன் உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் நடவடிக்கை.
செஸ் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்த்தால் நன்றாக இருக்கும் என கிராண்ட் மாஸ்டர் பிரக்யானந்தா தெரிவித்துள்ளார்.
பிரதமரிடம் தமிழகத்திற்கு நிதி வாங்க சென்றாரா? அல்லது தனது மகன் உதயநிதியை துணை முதலமைச்சராக்க ஆசிவாங்க சென்றாரா? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
நாமக்கல் அருகே கொள்ளையர்கள் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தில் சிதறி கிடக்கும் ரூபாய் நோட்டுகள். ஏ.டி.எம். கொள்ளையன் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்
நாமக்கல் - குமாரபாளையம் அருகே வந்த கொள்ளை கும்பலை நிறுத்த முயன்றபோது கண்டெய்னர் லாரியில் தப்பியோடிய கும்பல். கொள்ளையர்கள் தப்பியோடிய கண்டெய்னர் லாரியை நாமக்கல் போலீசார் துரத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகள்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகிறது. இப்படத்தில் சாய் பல்லவியின் கேரக்டர் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களில் நடித்து வரும் அஜித், மீண்டும் கார் ரேஸில் பங்கேற்க முடிவு செய்துள்ளார். கடந்த சில தினங்களாக இதுதொடர்பான செய்திகள் வெளிவந்த நிலையில், தற்போது செம மாஸ்ஸான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.