K U M U D A M   N E W S

AI

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 17 APR 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 17 APR 2025 | Mavatta Seithigal | Tamil News

சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு...வானிலை ஆய்வு மையம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திரைப்படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் - மதுரை ஆதினம்

வன்முறை, சண்டை காட்சிகள் குறித்து வரும் திரைப்படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், தமிழ் சினிமாவை அரசு வரைமுறை செய்ய வேண்டும் மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.

'ராஜாவின் இசை ராஜாங்கம்’ அதிரடி சலுகை அறிவித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்

கரூரில் நடைபெறவுள்ள இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை காண வரும் மாற்றுத் திறனாளிகளும் அவருடன் வரும் உதவியாளர்களும் இலவசமாக அனுமதிக்கப்படுவர் என்று நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குட்கா முறைகேடு வழக்கு.. சிபிஐ பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

குட்கா முறைகேடு வழக்கில் பென்-ரைவ் மூலம் வழங்கிய கூடுதல் குற்றபத்திரிகையில் பல தகவல் இல்லை என்பது தொடர்பான புகாருக்கு பதில் அளிக்க வேண்டும் என சிபிஐ-க்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டத்திற்கு தெரியுமா?

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. குருகிராமில் கொடூரம்

குருகிராமில் தனியார் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த விமான பணிப்பெண்ணை மருத்துவமனை ஊழியர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருட்டு கடையை வரதட்சணையாக கேட்ட மருமகன்.. முதலமைச்சர் தனிப்பிரிவில் பரபரப்பு புகார்

இருட்டு கடை உரிமையாளரின் மகள் ஸ்ரீ கனிஷ்காவின் கணவர் அக்கடையை வரதட்சணையாக கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் திடீரென பெய்த கனமழை.. நீண்ட நேரமாக வானில் வட்டமடிக்கும் விமானங்கள்

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெய்த திடீர் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன.

அமைச்சர் பொன்முடி பேசியது கருத்து சுதந்திரமா? பதவி நீக்கம் செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனு

சைவம் மற்றும் வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.