K U M U D A M   N E W S

ad

Armstrong Wife : ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கொலை மிரட்டல்.. 'யாராக இருந்தாலும் விடாதீர்கள்'.. செல்வபெருந்தகை ஆவேசம்!

Selvaperunthagai on Armstrong Wife Death Threats : ''ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு, பாதுகாப்பாக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கிறார். நானும் முதல்வரை சந்திக்கும்போது அது குறித்து பேச இருக்கிறேன்'' என்று செல்வபெருந்தகை கூறியுள்ளார்.

Independence Day : 05, 09, 13 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் - எந்த வழியில் செல்லலாம்: முழு விவரம்

Independence Day Parade Rehearsal : சுதந்திர தின விழாவினை ஒட்டி 05, 09, 13.08.2024 ஆகிய நாட்களில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற இருப்பதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Anbumani Ramadoss : வட்டி கட்டியே வீதிக்கு வந்த தயாரிப்பாளர்கள்.. 1,500 திரைப்படங்கள்.. ரூ.4,000 கோடி.. அன்புமணி வேதனை

Anbumani Ramadoss on Tamil Movie Producers : திரைப்படங்கள் வெளியில் வராததால் சொத்துகளை இழந்தும், வட்டி கட்டியே திவாலாகியும் வீதிக்கு வந்த தயாரிப்பாளர்கள் ஏராளம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Seeman : எனக்கு பெண் ரசிகர்கள் அதிகரித்தது அதன் பிறகுதான்.. காரணம் சொன்ன சீமான்

Seeman Female Fans : 15 ஆண்டுகளாக ஒரு பெண்ணை என்னுடன் இணைத்து வைத்து பேசினார்கள். அதன் பிறகு தான் எனக்கு பெண் ரசிகர்கள் அதிகரித்தார்கள் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

Udhayanidhi Stalin : 'இனி இப்படி செய்யாதீங்க'.. ஆசிரியர்களிடம் கோரிக்கை வைத்த உதயநிதி ஸ்டாலின்!

Minister Udhayanidhi Stalin Request Teacher : ''திராவிட மாடல் ஆட்சியில் கல்வியில் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருப்பதற்கு தனியார் பள்ளிகள் அளிக்கும் ஒத்துழைப்பு மிக மிக முக்கியமாக உள்ளது. மாணவ-மாணவிகள் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வெல்ல வேண்டும்'' என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Filmfare Awards 2024: பிலிம்பேரில் மாஸ் காட்டிய 'சித்தா' படம்.. 7 விருதுகளை தட்டித் தூக்கி அசத்தல்!

Filmfare Awards 2024 : பிலிம்பேர் விழாவில் கிட்டத்தட்ட அனைத்து பிரிவு விருதுகளையும் வென்ற 'சித்தா' திரைப்படம் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து பேசியதும், இந்த படத்துக்கு தமிழக மக்கள் பெரும் வரவேற்பு அளித்ததும் குறிப்பிடத்தக்கது. 'சித்தா'வுக்கு அடுத்தபடியாக மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன் 2'ம் பாகம் பல விருதுகளை தட்டிச் சென்றது.

ஆம்ஸ்ட்ராங் மனைவி, குழந்தைக்கு கொலை மிரட்டல்.. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு வந்த மர்ம கடிதம் தொடர்பாக மகாபலிபுரம் படூர் பகுதியை சேர்ந்த பள்ளி வேன் ஓட்டுநர் சதீஷ் என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு.. பாஜக நிர்வாகியை தட்டித் தூக்கிய போலீஸ்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக வியாசர்பாடியில் உள்ள வீட்டில் இருந்த கபிலனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Weather Update: இந்தியாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. எந்தெந்த மாநிலங்களில் ரெட் அலர்ட்?.. முழு விவரம்!

கர்நாடகாவின் கடலோர பகுதிகளில் ஆகஸ்ட் 6ம் தேதி வரை அதீத கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஆகஸ்ட் 7ம் தேதி வரை கனமழை தொடரும் என்றும் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஆகஸ்ட் 5ம் தேதி (நாளை) வரை கனமழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

'தாமரை மலர்ந்தே தீரும்'.. மீண்டும் பழைய பாணியை கையிலெடுத்த தமிழிசை சௌந்தர்ராஜன்!

''திமுகதான் சமூகநீதியை பாதுகாத்து வருகிறது என்று தொடர்ந்து கூறி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் துணை-முதலமைச்சர் பதவியை பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்க முடியுமா?'' என்று தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.