K U M U D A M   N E W S

ad

கபில்தேவ், அஸ்வினை தொடர்ந்து சாதனை படைத்த ஜடேஜா

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 300வது விக்கெட்டை வீழ்த்தி இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா அசத்தல்

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, தேனி, மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லட்டு விவகாரம்... ஆந்திர அரசை துளைத்தெடுத்த உச்சநீதிமன்றம்

திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு நெய் இருந்ததாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேட்டி அளித்ததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.... குடையை மறக்காதீங்க மக்களே!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் இன்று (செப். 30) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வக்ஃப் சட்டத் திருத்தம்... இஸ்லாமிய அமைப்புகளின் உணர்வுகளும் கருத்துகளும் மதிக்கப்பட வேண்டும்: அன்புமணி

வக்ஃப் சட்டத் திருத்தத்தில் இஸ்லாமிய அமைப்புகளின் உணர்வுகளும் கருத்துகளும் மதிக்கப்பட வேண்டும் என, மத்திய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

லட்டு விவகாரம்.. திருப்பதியில் அதிரடியாக களமிறங்கிய சிறப்பு விசாரணை குழு

கலப்பட நெய் விவகாரத்தில் திருப்பதி திருமலையில் சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். கோயிலுக்கு வெளியே பூந்தி தயாரிக்கும் மடப்பள்ளியிலும் விசாரணை குழுவினர் ஆய்வு நடத்துகின்றனர்.

கழிவுநீர் கால்வாயில் விழுந்து இளைஞர் பலி.. தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை அசோக் நகரில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து ஐயப்பன் என்பவர் உயிரிழந்ததற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்.. அதிமுக ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் சீரான மின்விநியோகம் கோரி அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் வரிசையில் மிதுன் சக்கரவர்த்தி... தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு!

பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அக் 8ம் தேதி நடைபெறும் 70வது தேசிய திரைப்பட விருது விழாவில் அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படவுள்ளது.

அதிகாலையிலேயே மதுரையை அலறவிட்ட இமெயில் - பள்ளிகளில் தீவிர சோதனை

மதுரை மாநகர் நரிமேடு பகுதியில் அமைந்துள்ள மத்திய அரசின் நேந்திர வித்யாலயா, காளவாசல் அருகே பொன்மேனி பகுதியில் உள்ள ஜீவனா மற்றும் சிந்தாமணி பகுதியில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸ் ஆகிய பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர்.