துணை முதலமைச்சர் உதயநிதியை நேரில் சந்தித்து வடிவேலு வாழ்த்து
மதுரையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து நடிகர் வடிவேலு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
மதுரையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து நடிகர் வடிவேலு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
மூல ஆவணங்கள் இல்லை எனக்கூறி பத்திரப்பதிவை நிராகரித்த சார்பதிவாளரின் உத்தரவை ரத்து செய்ய உத்தரவிடகோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்தை விட சார் பதிவாளர் உயர்ந்தவர்களா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மதுரை விமான நிலையம் நாளை (அக்டோபர் 1) முதல் 24 மணி நேரம் செயல்படும் என மதுரை விமான நிலைய இயக்குநர் முத்துக்குமார் அறிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையம் நாளை முதல் 24 மணி நேரமும் செயல்படும் என மதுரை விமான நிலைய இயக்குநர் முத்துக்குமார் அறிவித்துள்ளார். காலை 6.55 மணி முதல் இரவு 9.25 மணி வரை மட்டுமே மதுரை விமான நிலையம் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகர் நரிமேடு பகுதியில் அமைந்துள்ள மத்திய அரசின் நேந்திர வித்யாலயா, காளவாசல் அருகே பொன்மேனி பகுதியில் உள்ள ஜீவனா மற்றும் சிந்தாமணி பகுதியில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸ் ஆகிய பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர்.
RB Udhayakumar About CM Stalin Delhi Visit : வெளிநாடு பயணம் பூஜ்ஜியத்தை போன்று ஸ்டாலின் மேற்கொண்டுள்ள டெல்லி பயணமும் பூஜ்ஜியத்தில் தான் முடியும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.
Instagram Reels Issue in Madurai : மதுரையில் யார் பெரிய ஆள்…? என Instagram-ல் சவால் விட்டு ஸ்டேடஸ் வைத்த இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் குருக்கள் மற்றும் அலுவலர் பணியிடங்களை நிரப்ப கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இன்று விசாரணைக்கு வந்த வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை கோவில்களை முறையாக பராமரிப்பது இல்லை. அந்த துறை வசூல் ராஜா எம்பிபிஎஸ் பணிகளை மட்டுமே செய்கிறது என்று மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Madurai Meenakshi Temple Laddu: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தரமானது என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விளக்கம்.
Madurai High Court About OTT Platforms Censor : ஓடிடி தளங்களில் வெளியாகும் சினிமா, வெப் சீரியல்கள் போன்றவற்றை தணிக்கை செய்து வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் ஒன்றிய உள்துறை செயலர், ஒன்றிய தொலைத்தொடர்பு துறை செயலர், ஒன்றிய தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.