K U M U D A M   N E W S

லட்டு விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், லட்டு விவகாரத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்

Seizing Raja : என்கவுன்டர் நடந்தது எப்படி? தெற்கு இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி விளக்கம்

Rowdy Seizing Raja Encounter : சீசிங் ராஜாவுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கும் தொடர்பு இல்லை என தெற்கு இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

Offer Sale : ஆஃபர் கொடுத்த துணிக்கடை... அள்ளிச்செல்ல குவிந்த மக்களால் தள்ளுமுள்ளு..

Offer Sale in Erode : ஈரோடு தலைமை தபால் நிலையம் அருகே உள்ள துணி கடையில் சலுகை விலையில் துணிகள் விற்பனை என அறிவிக்கப்பட்டதால் மக்கள் குவிந்தனர். ஒரே நேரத்தில் மக்கள் அனைவரும் உள்ளே செல்ல முயற்சித்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். 

LIVE : Thirumavalavan Speech : தமிழ்நாடு அரசு மதுக்கடைகளை மூட வேண்டும் - திருமா

VCK Leader Thirumavalavan About Liquor Ban in Tamil Nadu : விசிக தலைவர் திருமாவளவன் x பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், அனைத்துக் கட்சிகளும் மதுவிலக்கு தேவை என்னும் கருத்தில் உடன்படுகின்றன. மத்திய அரசு தேசிய மதுவிலக்கு கொள்கையை உருவாக்கி மதுவிலக்கு சட்டத்தை இயற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து தமிழ்நாடு மதுக்கடைகளை இழுத்து மூட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கஞ்சா விற்பனையை தடுக்க வீடு வீடாக சென்று சோதனை.. போலீசாரின் அதிரடி நடவடிக்கை

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கஞ்சா விற்பனை தொடர்பாக போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 50க்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Ponneri Railway Station : திருவள்ளூரில் ரயிலை கவிழ்க்க சதி..?

Ponneri Railway Station : திருவள்ளூர் பொன்னேரியில் தண்டவாளத்தில் உள்ள ரயில்வே சிக்னல் பெட்டியின் போல்டுகள் கழற்றப்பட்டதால் ரயிலை கவிழ்க்க சதியா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கையில் அதிபர் தேர்தல்.. வாக்குப்பதிவு தொடக்கம்!

கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக பொங்கியெழுந்த மக்கள் அதிபர் மாளிகையை சூறையாடினார்கள். நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டே தப்பிச் சென்றார்.

சூட்கேசில் பெண் உடல்.. தரதரவென இழுத்து சென்ற கொடூரன் - அதிர்ச்சி காட்சி வெளியீடு

சென்னை துரைப்பாக்கம் அருகே இளம்பெண் கொலை செய்யப்பட்டு உடலை சூட்கேசில் வைத்து இழுத்து செல்லும் சிசிடிவி வெளியானது.

RSS அணிவகுப்பு... தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கக்கோரிய வழக்கில் தமிழக அரசும், காவல்துறையும் வரும் 24ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 

’ராகுல் காந்தி நம்பர் ஒன் பயங்கரவாதி’.. மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு.. பாய்ந்தது வழக்கு!

''ராகுல் காந்தியின் கருத்தை காலிஸ்தான் பயங்கரவாதிகள் வரவேற்றுள்ளனர். எப்போது இதுபோன்ற நபர்கள் ராகுல் காந்திக்கு ஆதரவு கொடுக்க ஆரம்பித்தனரோ, அப்போதே அவர் (ராகுல் காந்தி) நம்பர் ஒன் பயங்கரவாதியாக விட்டார்'' என்று மத்திய அமைச்சர் தெரிவித்திருந்தார்.