06 AM Speed News | விரைவுச் செய்திகள் | 23-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7
06 AM Speed News | விரைவுச் செய்திகள் | 23-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7
06 AM Speed News | விரைவுச் செய்திகள் | 23-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே மாடம்பாக்கம் பகுதியில் சாலையில் அறுந்து விழுந்த மின்கம்பி. இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இளைஞர் மீது மின்கம்பி அறுந்து விழுந்தது
கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மகளிர் தங்கும் விடுதியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு. புகாரின் அடிப்படையில் ராஜ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை
தொழிலாளர் போராட்டத்தால் நூறு மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனம் தெரிவித்த நிலையில், தொழிற்சங்கம் தொடங்குவது அடிப்படை உரிமை என தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் போதைப்பொருள் அதிகரித்துள்ளதாக திமுக அரசுக்கு எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொது சேவை செய்ய வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் கட்சி தொடங்கியுள்ள விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் பாண்டிச்சேரி மாநில செயலாளர் சரவணன் மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் விஜய் போனில் ஆறுதல் கூறினார்.
சேலம் மேட்டூர் அருகே தூக்கனாம்பட்டி பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அத்தியாவசிய பொருட்கள் நீரில் மூழ்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக்.22) 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் ராஜகண்ணப்பன் 411 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை அபகரித்துள்ளதாக, அறப்போர் இயக்கம் ஊழல் புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.