நவம்பர் முதல் நாளே ஆபத்து..! - பயமுறுத்தும் 'வார்னிங்'
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 19 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க கவசம் நினைவாலய பொறுப்பாளர் முன்னிலையில் அகற்றப்பட்டு பெட்டிக்குள் பாதுகாப்பாக வைத்து ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மதுரை வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.
தை பிறந்தவுடன் காங்கிரஸ் கட்சிக்கு வழிபிறக்கும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடித்த 156 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தொடர் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் அந்த பகுதியில் நிலவுகிறது.
அருவியின் நீர்ப்படிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கும்பக்கரை அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு கோவை ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக பக்தர்கள் வழிபாடு நடத்தினர். பக்தர்களின் வருகை அதிகரித்ததை அடுத்து 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, இதனால் மங்கலம் - கல்லூரி சாலையை இணைக்கும் தரைப்பாலம் மூழ்கியது. இதையடுத்து தரைப்பாலத்தை பொதுமக்கள் கடக்காமல் இருக்க இரும்பு வேலிகள் அமைத்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறையையொட்டி குற்றாலம் சென்ற சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.