K U M U D A M   N E W S

துணை ஜனாதிபதி வருகை.. ட்ரோன் பறக்க தடை.. சென்னை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு!

இந்திய துணை ஜனாதிபதி வருகை காரணமாக சென்னை விமான நிலையம் மற்றும் விவிஐபி பயணிக்கும் வழிதடங்கள் “சிவப்பு மண்டலமாக” அறிவிக்கப்பட்டு நாளை ( ஜூன் 14 ) ட்ரோன்கள் பறக்க விட தடை செய்யப்பட்டுள்ளது.

விண்வெளிக்கு செல்ல 3-வது முறையாக ஆயத்தமாகும் சுபான்ஷூ சுக்லா.. இஸ்ரோ அறிவிப்பு!

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா உட்பட நான்கு விண்வெளி வீரர்கள் ஜூன் 19 ஆம் தேதி விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 2 முறை இவர்களின் விண்வெளி பயணம் முன்னெடுக்கப்பட்டு தொழில்நுட்பம், வானிலை காரணங்களால் Axiom-4 திட்டம் 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், Axiom-4 மிஷன் மீண்டும் 3 முறையாக தொடங்கப்படுகிறது.

உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை - 131வது இடத்திற்கு சரிந்த இந்தியா!

உலக பொருளாதார கூட்டமைப் பின் உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையில் 131-வது இடத்திற்கு சென்றது இந்தியா. மொத்தம் 146 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இந்தியா 2 இடங்கள் சரிந்துள்ளது.

ஜூன் 13 முதல் OTT-யில் வெளியாகிறது சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல்!

ZEE5 , அதிரடி வெற்றித் திரைப்படமான “டிடி நெக்ஸ்ட் லெவல்” படம் வரும் ஜூன் 13 முதல், தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடம் மொழிகளில் ஒளிப்பரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி ஆதார் கட்டாயம்.. ரயில்வே வெளியிட்ட புதிய அறிவிப்பு..!

IRCTC கணக்குடன் கட்டாயம் ஆதாரை இணைக்க ரயில்வே அறிவுறுத்தியுள்ள நிலையில், ஜூலை 1 முதல் ஆதார் சரிபார்ப்பு செய்யப்பட்ட பயனர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பட்டுக்கோட்டை 10 ரூபாய் டாக்டர் மரணம்- பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி

தன்னை பார்க்க வருகைத்தரும் நோயாளிகளிடம் 10 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெற்று சிகிச்சை அளித்து வந்த புகழ்பெற்ற பட்டுக்கோட்டை 10 ரூபாய் டாக்டர் கனக ரெத்தினம்பிள்ளை வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். அவரது உடலுக்கு திரளான பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

Covid 19 Cases in Tamil Nadu | கொரொனா தொற்று - மேலும் ஒருவர் உயிரிழப்பு | Corona Death in Trichy

Covid 19 Cases in Tamil Nadu | கொரொனா தொற்று - மேலும் ஒருவர் உயிரிழப்பு | Corona Death in Trichy

Coronavirus Cases Today Update 2025 | மீண்டும் பரவும் கொரோனா இத்தனை பேர் பலியா? | Kumudam News

Coronavirus Cases Today Update 2025 | மீண்டும் பரவும் கொரோனா இத்தனை பேர் பலியா? | Kumudam News

மீண்டும் தாக்கும் கொரோனா மதுரையில் முன்னெச்சரிக்கைகள் தீவிரம் | Kumudam News

மீண்டும் தாக்கும் கொரோனா மதுரையில் முன்னெச்சரிக்கைகள் தீவிரம் | Kumudam News

ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு

ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு