K U M U D A M   N E W S

‘வாழ்விழந்த மீனவர்கள்.. 40 எம்.பி.க்கள் எங்கே?’..எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

''தமிழக மீனவர் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசின் உறுதியான நடவடிக்கையை விடியா திமுக அரசால் நிர்ப்பந்தித்து பெறமுடியவில்லை. தனக்கோ, தன்குடும்பத்திற்கோ தேவையென்றால், ஒரு நொடியில் சாதித்துக் கொள்ளும் ஸ்டாலின், தமிழக மீனவர்களுக்கோ, தமிழக நலனுக்கோ பாதிப்பு ஏற்படும்போது ஏனோதானோ என்று கடிதத்துடன் நிறுத்திக்கொள்கிறீர்கள்'' என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

'இலங்கையில் புதிய அதிபர்.. இப்பயாவது இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டுங்க'.. அன்புமணி கோரிக்கை!

''இலங்கையில் தேர்தல் முடிவடைந்து புதிய அதிபர் பதவியேற்கவுள்ள நிலையில், மீனவர்கள் மீதான தாக்குதலையும், கைது நடவடிக்கைகளையும் கைவிடும்படி அவரிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கையில் அதிபர் தேர்தல்.. வாக்குப்பதிவு தொடக்கம்!

கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக பொங்கியெழுந்த மக்கள் அதிபர் மாளிகையை சூறையாடினார்கள். நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டே தப்பிச் சென்றார்.

This Week OTT Release: ரகு தாத்தா, நண்பன் ஒருவன் வந்த பிறகு... இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் அப்டேட்ஸ்!

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரகு தாத்தா, நண்பன் ஒருவன் வந்த பிறகு உள்ளிட்ட மேலும் சில படங்கள், வெப் சீரிஸ்கள் இந்த வாரம் (செப்.13) ஓடிடி தளங்களில் வெளியாகின்றன.

அடங்காத இலங்கை கடற்படை; நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்!

நடுக்கடலில் இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் தமிழக மீனவர்களின் படகு கவிழ்ந்தது.

இந்திய சந்தையில் களமிறங்கும் ரியல்மி 13 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட் போன்... கண்களைக் கவரும் மூன்று வண்ணங்களில்!

ரியல்மி நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ரியல்மி 13 ப்ரோ+ 5ஜி மொபைல் போன்களை இன்னும் 2 நாட்களில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது.

NCC கேம்ப்பில் 13 மாணவிகள் பாலியல் வன்கொடுமை... ஆக்ஷனில் இறங்கிய தேசிய மனித உரிமைகள் ஆணையம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியைச் சேர்ந்த 13 மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.

வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்டவர்களிடம் உருகிய பிரதமர் மோடி.. கேரளாவுக்கு அளித்த வாக்குறுதி என்ன?

''இது சாதாரண பேரழிவு கிடையாது. இதன்மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகள் நொறுங்கியுள்ளன. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டேன். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன்'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இலங்கை கடற்படை மீண்டும் மீண்டும் அட்டூழியம்.. புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் கைது!

தொடர்ச்சியாக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்களும், தமிழ்நாடு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

NEET Exam 2024 : 'ஹே எப்புட்றா'.. பிளஸ் 2வில் தோல்வி.. ஆனால் நீட் தேர்வில் 705 மதிப்பெண் பெற்ற குஜராத் மாணவி!

Gujarat Girl Student NEET Exam Results Issue : குஜராத்தை சேர்ந்த மாணவி ஒருவர் பிளஸ் 2 தேர்வில் பெயிலான நிலையில், நீட் தேர்வில் 720க்கு 705 மதிப்பெண்கள் பெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தை சேர்ந்த மாணவி கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் இயற்பியல், வேதியியல் பாடங்களில் தோல்வி அடைந்தார்.