K U M U D A M   N E W S

06 AM Speed News | விரைவுச் செய்திகள் | 28-09-2024

இன்றைய முக்கிய செய்திகளை விரைவுச் செய்திகளாக இங்கே பார்க்கலாம்...

ரூ.9000 கோடி மதிப்பீட்டில் கார் உற்பத்தி ஆலை.. அடிக்கல் நாட்டும் முதலமைச்சர்

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே அமையவுள்ள தொழில் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார்.

காதலுக்கு இளைஞர் மறுப்பு.. கூகுள் பே-யில் பணம் அனுப்பி அடித்து துவைத்த இளம்பெண்

Youth Attack Lover in Pudukkottai : புதுக்கோட்டையில் காதலுக்கு மறுப்பு தெரிவித்த இளைஞரை பணம் கொடுத்து ஆட்களை வைத்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி காலமானார்

இயற்கை வேளாண்மைக்காக பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் (109) வயது முதிர்வு காரணமாக காலமானார்

சந்திரபாபு அரசு எதற்கும் தகுதி இல்லாதது.. கையில் ஆதாரம்.. அனல் பறந்த பேச்சு..

சந்திரபாபு நாயுடு அரசு எதற்கும் தகுதியில்லாத அரசு என ரோஜா தெரிவித்துள்ளார்

பவன் கல்யாண் டயலாக்கை மாற்றி மாற்றி பேசுகிறார்.... ரோஜா கடும் விமர்சனம்!

கதாநாயகர்கள் படத்தில் கொடுக்கக்கூடிய டயலாக்கை எப்படி பேசுவார்களோ அதே போல் பவன் கல்யாண் ஒவ்வொரு முறையும் மாறி மாறி பேசி வருகிறார் என முன்னாள் ஆந்திரா சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா விமர்சித்துள்ளார்.

"விஜய்க்கு தவறான ஆலோசனை சொல்றாங்க" | Ravindran Duraisamy Exclusive interview

"விஜய்க்கு தவறான ஆலோசனை சொல்றாங்க" | Ravindran Duraisamy Exclusive interview

Amaran: க்யூட் பேபியாக மாறிய சாய் பல்லவி... அமரன் படத்தில் மெர்சல் காட்டும் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகிறது. இப்படத்தில் சாய் பல்லவியின் கேரக்டர் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

அரசு பேருந்து சாலை தடுப்பில் மோதி பயங்கர விபத்து - பதைபதைக்க வைக்கும் காட்சி

வேலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி அரசு பேருந்து விபத்துக்குள்ளானது. அரசு பேருந்து சாலை தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.

Ajith: மீண்டும் கார் ரேஸுக்கு ரெடியான அஜித்... Ferrari-ல் டெரர் அவதாரம்... வைரலாகும் போட்டோஸ்!

விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களில் நடித்து வரும் அஜித், மீண்டும் கார் ரேஸில் பங்கேற்க முடிவு செய்துள்ளார். கடந்த சில தினங்களாக இதுதொடர்பான செய்திகள் வெளிவந்த நிலையில், தற்போது செம மாஸ்ஸான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.