புதுச்சேரியை துவம்சம் செய்த ஃபெஞ்சல் புயல்
புதுச்சேரி அருகே ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், கனமழை வெளுத்து வாங்கியது.
புதுச்சேரி அருகே ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், கனமழை வெளுத்து வாங்கியது.
ஃபெஞ்சல் புயல் தென்மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, 30.11.2024 முதல் 09.12.2024 வரை மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
புயல் கரையை கடந்தபோது 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து 110 கி.மீ தொலைவில் ஃபெஞ்சல் புயல் மையம் - வானிலை ஆய்வு மையம்
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எண்ணூரில் 7 செ.மீ மழைபதிவாகியுள்ளது.
ஃபெஞ்சல் புயல் இன்று பிற்பகல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், ஃபெஞ்சல் புயலின் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது.
ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசும், இடையிடையே 90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்றும் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் 2,229 நிவாரண மைய கட்டடங்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.