K U M U D A M   N E W S

முதல்வர்விஜய்

ரூ.23 கோடியில் பிரம்மாண்ட பேருந்து நிலையம்...புதுக்கோட்டையில் திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

புதுக்கோட்டையில் ரூ.23 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று திறந்து வைத்தார்.

பசும்பொன் செல்லவில்லை...நந்தனத்தில் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்வர் விஜய்!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது பிறந்தநாள் மற்றும் 64-வது குருபூஜையை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

"தற்குறி முதல்வர் விஜய்க்கு நன்றி " - ஜாமினில் வெளிவந்த நாதக கார்த்திகா விமர்சனம் !

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரப் பாதை மறியல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நாதக வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட 9 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், கோவை சிறை வாசலில் அளிக்கப்பட்ட வரவேற்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கார்த்திகா தெரிவித்த கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.

கனமழை கொடுத்த ட்விஸ்ட்... விஜய்யின் கேரள பயணத்தில் திடீர் மாற்றம்!

கோவை பயணத்தை முடித்துவிட்டு கேரளா செல்லத் திட்டமிட்டிருந்த முதலமைச்சர் விஜய்யின் பயணத்தில், மோசமான வானிலை திடீர் ட்விஸ்ட்டை கொடுத்துள்ளது.

விஜய் சென்ற கனக துர்கா கோயில்… தங்கக் கூரை முதல் தலபுராணம் வரை!

அரசியல் பயணத்தில் ஆன்மிகத் தரிசனம்… விஜயவாடா கனக துர்கா அம்மன் கோயிலில் முதலமைச்சர் விஜய் வழிபாடு. மகிஷாசுரனை வதம் செய்த அன்னை, தங்க மழை பொழிந்த தலபுராணம், நவராத்திரியில் ஒன்பது அலங்காரங்கள் என இந்தக் கோயிலின் சிறப்புகள் என்னென்ன?

நயினாருக்கு ஒரு நியாயம்... திரிஷாவுக்கு ஒரு நியாயமா? – இடும்பாவனம் கார்த்திக் கேள்வியால் விஜய் அரசுக்கு நெருக்கடி!

நயினார் நாகேந்திரன் முன்வரிசையில் அமர்ந்தது குறித்து மாணிக் தாகூர் கேள்வி எழுப்பிய நிலையில், சுதந்திர தின விழா மேடையில் நடிகை திரிஷா முன்வரிசையில் அமர்ந்ததற்கான காரணம் என்ன என இடும்பாவனம் கார்த்திக் எழுப்பிய கேள்வி அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

விஜய்யின் அடுத்த விசிட் விஜயவாடாவா? பவன் கல்யாணுடன் சந்திப்பு? பின்னணி என்ன?

சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திராவிடம் இருந்து கிடைக்க வேண்டிய கிருஷ்ணா நதி நீர் குறைந்துள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வரும் அக்டோபர் 13-ம் தேதி விஜயவாடா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜயின் வருகை குறித்து அஜித் சொன்னது என்ன... வைரலாகும் வீடியோ !

முதலமைச்சர் விஜயின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்த அஜித் குமார், இந்தியாவில் சர்வதேச தர கார் பந்தயங்கள் நடைபெற வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

முதலீடுகள் குறித்து பரவும் தகவல்களுக்கு அமைச்சர் கீர்த்தனா பதில்! | Kumudam News

முதலீடுகள் குறித்து பரவும் தகவல்களுக்கு அமைச்சர் கீர்த்தனா பதில்! | Kumudam News

“பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்பதில் உறுதி!” – அமைச்சர் நிர்மல்குமார்

பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக மீண்டும் அரசியல் விவாதம் எழுந்துள்ள நிலையில், அந்தப் பகுதியில் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்காது என்று அமைச்சர் நிர்மல்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.