அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் அண்ணன் மகன் கைது.. சிபிஐ அதிரடி சோதனை
புதுச்சேரி சாலை ஒப்பந்த பணிக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அண்ணன் மகன் இளமுருகனை சிபிஐ லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
புதுச்சேரி சாலை ஒப்பந்த பணிக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அண்ணன் மகன் இளமுருகனை சிபிஐ லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
முல்லைப்பெரியாறு பிரச்னை குறித்து கேரள முதல்வரிடம் பேசினீர்களா என முதலமைச்சருக்கு கேள்வி
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக மனப்பூர்வமாக ஆதரவளிப்பதாக விஜய் பதிவு
2021 தேர்தலில் திமுக 525 அறிவிப்புகள் வெளியிட்டது. 15 அறிவிப்புக்கு தான் நிறைவேற்றி உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றவில்லை என அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.சரண்டர் விடுப்பு அதிமுக ஆட்சியில் நிறுத்தியதாக தவறான தகவலை சட்டமன்றத்தில் வெளியிட்டுள்ளனர்.
நாட்டின் தலைநகரத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, குற்ற சம்பவங்கள் அதிகரித்திருக்கிறது.அங்கு குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாதவர்கள் தமிழகத்தில் குற்றங்கள் நடப்பதை சுட்டிக்காட்ட அருகதை கிடையாது.
தி.மு.க. அரசின் கபட நாடக ஏமாற்று வேலையால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள், விடுமுறை நாளான இன்றும் கூட போராட்டக் களத்தில் உள்ளனர்
இந்தியாவிலேயே முதன் முறையாக பழங்குடியினர்களுக்கு என 50 படுக்கை வசதிகளுடன் மலை பிரதேசத்தில் அதிநவீன உயர் சிகிச்சையுடன் 700 படுக்கை வசதிகளுடன் 499 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை எதிர்வரும் ஆறாம் தேதி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக, மருத்துவ கல்லூரி ஆய்வுக்கு பின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் பதற்றமான சூழல் நிலவுவதால், போலீசார் குவிப்பு; ஆம்புலன்ஸை ஆதரவாளர்கள் அடித்து உடைத்ததால் பரபரப்பு
சென்னை காவல் துறையின் சார்பில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை காண வரும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ‘‘சென்னை சிங்கம் IPL QR குறியீடு‘‘ என்ற நவீன வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
"டாஸ்மாக்குக்கு எதிராக அண்ணாமலை நடத்தும் போராட்டம் ஒரு நாடகம் என விமர்சனம்