K U M U D A M   N E W S
Advertisement

சோகத்தில் அதிமுக.. வால்பாறை எம்.எல்.ஏ. காலமானார்

வால்பாறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

பட்டியலின மக்கள் மீதான வன்முறை: திமுக ஆட்சியில் உச்சம்- நயினார் நாகேந்திரன்

பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் திமுக ஆட்சியில் கொடூர உச்சத்தை அடைந்திருப்பதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

'முதல்வர் மருந்தகம்' அல்ல.. 'முதல்வர் மாவகம்'- அண்ணாமலை விமர்சனம்

அடிப்படைச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல், முதல்வர் மருந்தகங்களில் தற்போது மாவு விற்பனை செய்யும் நிலைக்குத் மருந்தக உரிமையாளர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

குண்டு போட்ட வைகைச்செல்வன்.. சிதறும் அறிவாலய கூட்டணி..? நழுவும் திருமா?

திமுக கூட்டணி குறித்து பேட்டியளித்த வைகைச்செல்வன் பெரிய குண்டைத் தூக்கி போட்டுள்ளார். அப்படி அவர் கூறியது என்ன? சிதறப்போகிறதா அறிவாலய கூட்டணி? இதனால் அறிவாலயம் அலறிப்போயுள்ளதாக கூறப்படுகிறது.

வைகைச் செல்வனுடன் சந்திப்பு.. அரசியல் எதுவும் பேசவில்லை- திருமாவளவன் விளக்கம்

வைகைச் செல்வன் உடனான சந்திப்பு "நட்பின் அடிப்படையில் நிகழ்ந்தது என்றும் திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்து விட்டது என்று அவர் ஏன் அப்படி சொன்னார் என எனக்கு தெரியவில்லை" என திருமாவளவன் கூறினார்.

விசிக பிரமுகர் படுகொலை... போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களால் பரபரப்பு

திருவண்ணாமலை அருகே விசிக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து முக்கிய குற்றவாளிகளை கைது செய்யக் கோரி விசிகவினர் மற்றும் உறவினார்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாதிவாரி சர்வே என்றால் முதல்வருக்கு கசப்பது ஏன்? - அன்புமணி கேள்வி

தமிழ்நாட்டில் சாதிவாரி சர்வே உடனடியாக நடத்த வேண்டும் எனவும், சாதிவாரி சர்வே என்றால் முதல்வருக்கு கசப்பது ஏன்? எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்விஎழுப்பியுள்ளார்.

திமுக ஆட்சியில் மதச்சார்பின்மை இருக்கிறதா?.. நயினார் நாகேந்திரன் கேள்வி

"ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் பக்தர்களின் உரிமைகளை பறிக்கும் விதம் கட்டண தரிசன முறையை அமல்படுத்தி இருப்பது, திமுக ஆட்சியில் மதச்சார்பின்மை இருக்கிறதா எனும் சந்தேகத்தை எழுப்புகிறது" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சொந்த அக்காவிடம் மோசடி.. அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் கைது

தனது சொந்த சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.

சாதிவாரிக் கணக்கெடுப்பு கண்துடைப்பாக இருக்கக்கூடாது.. விஜய் வலியுறுத்தல்

"மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பானது உண்மையான சமூக நீதியை நிலைநாட்டுவதாக இருக்க வேண்டும்" என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.