K U M U D A M   N E W S

அரசியல் கோமாளி அண்ணாமலை.. அமைதி காக்கும் பழனிசாமி- கீதா ஜீவன் விளாசல்

மதுரையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷா  கைதான நிலையில் இத்தகைய பாலியல் குற்றவாளிகளின் கூடாரத்தை வைத்துக் கொண்டுதான், ’அரசியல் கோமாளி’ அண்ணாமலை நடத்திய சவுக்கடி நாடகத்தை எண்ணி, இப்போது நாட்டு மக்கள் காறி உமிழ்கிறார்கள் என்று அமைச்சர் கீதா ஜீவன் குற்றம்சாட்டியுள்ளார்.

UGC NET 2024: மத்திய அரசிற்கு இதுவே வாடிக்கையாகிவிட்டது- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழ்ப் பண்பாட்டுத் திருநாட்களின்போது முக்கியத் தேர்வுகள் நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவிப்பதும், மாநில அரசின் தலையீட்டுக்குப் பின்னர் அது ஒத்திவைக்கப் படுவதும் வாடிக்கையாகிவிட்டது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தல்.. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த அறிவிப்பை அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார்.

UGC NET 2024: ஜனவரி 15 நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைப்பு.. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

பொங்கல் அன்று நடத்தப்படும் பல்கலைக்கழக மானியக்குழுவின் நெட் தேர்வை மாற்றக்கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திய நிலையில் ஜனவரி 15-ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

2026-ல்  நல்லாட்சி லட்சியம் நிறைவேற பொங்கட்டும் வெற்றிப் பொங்கல்- விஜய்

பொங்கல் திருநாளையொட்டி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ள தவெக தலைவர் விஜய் ‘நல்லாட்சி லட்சியம் நிறைவேற, அதற்கான முன்னோட்டமாய் 2025-ஆம் ஆண்டின் தைத்திருநாளில் பொங்கட்டும் வெற்றிப் பொங்கல்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

புதிய குற்றவியல் சட்டங்கள்.. 15 நாட்களில் மக்கள் கருத்துகளை தெரிவிக்க அறிவுறுத்தல்

புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக பொதுமக்கள் 15 நாட்களில் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.சத்யநாராயணன் தலைமையிலான  ஒருநபர் குழு அறிவித்துள்ளது. 

காவலர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு - முதலமைச்சர் அதிரடி

காவல்துறை, சீருடை அலுவலர்கள், பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

திமுக ஆட்சியில் மேலும் பல "சார்கள்" - EPS தாக்கு

"சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் ஒருவர் புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவத்தால் அதிர்ச்சி"

பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. திமுக ஆட்சியில் பல ‘சார்’கள் உருவாகிக்  கொண்டிருப்பதாக பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளி ஒருவருக்கு இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் திமுக ஆட்சியில் பல ‘சார்’கள் உருவாகிக்  கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. கையும் களவுமாக பிடிபட்ட போதை ஆசாமி

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண்கள் வார்டில் புகுந்து 50 வயது பெண் நோயாளியிடம் போதை ஆசாமி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.