முதலமைச்சரை அங்கிள் என கூறிய விஜய் – அமைச்சர் மதிவேந்தன் சொன்ன பதில்
தமிழக முதலமைச்சருக்கு பல்வேறு முகங்கள் உள்ளது என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சருக்கு பல்வேறு முகங்கள் உள்ளது என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.
தவெக ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாடு நொறுங்கிப் போகும் என எச்.ராஜா விமர்சித்துள்ளார்.
பா.ஜ.க. அரசு பாசிச அரசு என்பதை உறுதிப்படுத்த இந்தக் கூட்டத்தொடர் சான்றாக அமைத்து உள்ளது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் தவெக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக்குழு வரவேற்பு தெரிவித்துள்ளது.
திமுகவை வீழ்த்தும் சக்தியுள்ள ஒரே கட்சி அதிமுக மட்டுமேயென விஜய்க்கு இபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
மதுரை தவெக மாநாட்டில் பங்கேற்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் இன்று 2-வது மாநில மாநாட்டில் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.
விஜய்யை விமர்சித்த சீமானுக்கு எதிராக மதுரை தவெக மாநாட்டு திடலில் தொண்டர்கள் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தவெக மாநாடு வெற்றி பெற எனது வாழ்த்துகள் என சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம். மாற்று சக்தி நாமன்று, முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம் என விஜய் தொண்டர்களுக்கு அழைப்பு
தமிழகத்தில் பெண்ணுரிமையை காக்கவும், பெண்களுக்கு எதிரான வன்முறையைப் போக்கவும், பெண்கள் முன்னேற்றம் காணவும் பாமக மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து நடத்தும் மகளிர் பெருவிழா மாநாடு நேற்று பூம்புகாரில் நடைபெற்றது.
காவல் துறையின் அறிவுறுத்தலை ஏற்று மாநாடு ஆக.21ல் நடத்தப்படும் என விஜய் அறிவிப்பு
பாரதிய ஜனதா கட்சி (பாஜக) கூட்டணியில் யார் வேண்டுமானாலும் வந்து சேர்ந்து கொள்ளலாம் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
பனையூர் தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெறவுள்ள தவெக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையின் போது இந்த செயலியை வெளியிடுகிறார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரையில் ஆக.25ம் தேதி நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இந்த நிலையில் மதுரையில் மாநில மாநாடு நடைபெற உள்ள இடத்தில் இன்று பூமி பூஜை ஆரவாரமாக நடைபெற்றது.
இந்தியா 2047-க்குள் அலுமினிய உற்பத்தியை ஆறு மடங்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் தொலைநோக்கு ஆவணம் ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் வெளியிடப்பட்டது. அதேபோல், தாமிரத்தின் தேவையும் 2047-க்குள் ஆறு மடங்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதை பூர்த்தி செய்யும் வகையில், 2030-க்குள் 5 மில்லியன் டன் தாமிர உருக்கு மற்றும் சுத்திகரிப்பு திறன் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜூலை 2 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை 8 நாள் சுற்றுப்பயணமாக வரை 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணம் இருநாட்டுகளின் உறவுகள், பொருளாதார ஒத்துழைப்புகள் மற்றும் உலகளாவிய நிலைப்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கத்தில் அமைந்துள்ளது.
அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணைந்தாலும், என் வழி தனி வழி என பயணித்துக் கொண்டிருந்த அண்ணாமலை தற்போது எடப்பாடி பழனிசாமியின் வழிக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாமலை ஆற்றிய உரை பாஜக-வினரை மட்டுமல்லாது அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்களையும் குஷிப்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.
பெரியாரையும், அண்ணாவையும் அவமானப்படுத்தக்கூடிய இடத்திலேயே அதிமுகவும் இணைந்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது உண்மையிலேயே அவர்கள் யார் என்பதை காட்டியுள்ளது என கனிமொழி விமர்சனம்
தி.மு.க கையாளாகாத வேலையை காட்ட RSS நிகழ்ச்சியில் சர்ச்சையை கிளப்பி உள்ளதாகவு, கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு என்று ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.
அண்ணாவின் பெயரைத் தாங்கிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், அண்ணாவுக்கும், பெரியாருக்கும் பெரும் அவமானத்தை தேடித் தந்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாகச் சாடியுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிடத்தை ஒழிப்போம் என்று அண்ணா, பெரியார் படங்களுடன் வீடியோ வெளியானது குறித்து நான் இன்னும் பார்க்கவில்லை, அதனை பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன் என பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
"தமிழகத்தில் நடக்கும் சமூக விரோத நடவடிக்கைகள் மாய்ந்து போக, முருகனின் வேல் எங்களுக்கு உதவி செய்யும்" என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
"முருக பக்தர்கள் மாநாட்டுக்கு யார் தடை ஏற்படுத்த நினைத்தாலும் அதனை தகர்த்தெறியும் சக்தி ஆன்மீகத்துக்கு உண்டு" என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
வரும் 22ம் தேதி முருகரை கையில் எடுத்திருக்கிறோம், அதேபோல் வரும் 2026ம் ஆண்டில் தமிழ்நாட்டையே கையில் எடுப்போம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.