செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின்
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள ஜாமின் மனு மீது உச்சநீதிமன்றம் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பளிக்கிறது.
Senthil Balaji Case Update : ''இந்த வழக்கில் அமலாக்கத்துறையினர் என்ன விசாரிக்கிறார்கள்? என்பது தெரியவில்லை. அவர்கள் என்ன விசாரிக்கிறார்கள்? இந்த வழக்கு எப்போது முடியும்? என்பது கடவுளுக்குதான் தெரியும்'' என்று செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்பட்டு இருந்தது.
பள்ளி வளாகங்கள் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிம்னற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும் புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பான மத்திய அரசின் சட்டத்தின், திருத்தங்கள் செய்வது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
Savukku Shankar Case Update : யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிரான குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் கமலா தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் சட்டம் திரும்ப பெற்றுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்தது. அந்த விளக்கத்தை ஏற்று குண்டாசை ரத்து செய்த்தோடு, வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது
Savukku Shankar Case Update : இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வந்த நிலையில், ஜாமீன் வழங்கிய பிறகும் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது ஏன்? என நீதிபதிகள் தமிழ்நாடு காவல் துறைக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தனர். சவுக்கு சங்கர் மீதான வழக்குகள் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
OTT Platforms Censor Issue in Madurai High Court : ஓடிடி தளத்தில் வெளியாகும் சினிமா, வெப் சீரியல்கள் போன்றவற்றை தணிக்கை செய்வது தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Madurai High Court About OTT Platforms Censor : ஓடிடி தளங்களில் வெளியாகும் சினிமா, வெப் சீரியல்கள் போன்றவற்றை தணிக்கை செய்து வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் ஒன்றிய உள்துறை செயலர், ஒன்றிய தொலைத்தொடர்பு துறை செயலர், ஒன்றிய தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு இந்தியில் மட்டும் பெயர் வைத்ததன் மூலம் தமிழர்கள் மீது இந்தி திணிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மாரப்பன் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அரசு இதுதொடர்பாக பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என தயாநிதி மாறன் தரப்பு வழக்கறிஞர் பதில் தரப்பு வாதத்தை எடுத்துரைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அக்டோபர் 16 தேதி இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.