K U M U D A M   N E W S

மன

காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ்குமாருக்கு 3 மாதம் சிறை...நீதிமன்றம் அதிரடி உத்தரவு

2014ம் ஆண்டு மிடாலம் பகுதியில் புறம்போக்கு நிலத்தை மீட்க வந்த அதிகாரிகளை எம்.எல்.ஏ தாக்கியதாக கூறப்படுகிறது.

பெரியார் பல்கலை துணைவேந்தர் வழக்கு.. ஜாமீன் ரத்துசெய்யக்கோரிய மனுவை தள்ளிவைத்த நீதிமன்றம்!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு சேலம் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல் துறை தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

நடிகர் பிரபு தான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர் - உயர்நீதிமன்றம்

நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நடிகர் பிரபு தாக்கல் செய்த மனுவை தொடர்ந்து, அன்னை இல்லத்தின் உரிமையாளர் பிரபு தான் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேள்வி கேட்டதால் ஆத்திரம்...முதியவரை அடித்து இழுத்து சென்ற மருத்துவர்...மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு

வீடியோவில் மருத்துவரின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது. இது குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டோம் என மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

உச்சநீதிமன்றம் குறித்து பாஜக எம்.பி-யின் சர்ச்சை பேச்சு: கடிவாளம் போட்ட ஜே.பி.நட்டா

உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவை பாஜக எம்பி நிஷிகாந்த் துபே விமர்ச்சித்த விவகாரம் சர்ச்சை ஆன நிலையில், பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, எம்பி நிஷிகாந்த் கருத்து பாஜகவின் கருத்தல்ல என வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு...“இவங்களையும் சமமாக நடத்துங்க” –நீதிமன்றம் போட்ட உத்தரவு

ஹரிஹரனின் பாதுகாப்பு கருதியே அதிக பாதுகாப்பு கொண்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

சட்டமன்றத்தில் தீர்மான நாடகத்தை முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார்- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

கருணாநிதி மாநில சுயாட்சி தீர்மானம் நிறைவேற்றி மு.க.அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோருக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கியுள்ளார்

ரூ.2000-க்கு மேல பணம் அனுப்புனா GST உண்டா..? மத்திய அரசு விளக்கம்

ரூ.2000-க்கு மேற்பட்ட ஒவ்வொரு பணப்பரிவர்த்தனைக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்ற செய்திக்கு மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

இறுதிச் சடங்கில் பங்கேற்க விசாரணை கைதிகளுக்கு ஏன் பாரபட்சம்? நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பிப்பு

விசாரணை கைதிகள் நெருங்கிய உறவுகளின் இறுதிச்சடங்கில் பங்கேற்க கூட நீதிமன்றங்களை நாட வேண்டியுள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Mandaadi: சூரியின் நடிப்பில் மண்டாடி.. இயக்குனர் இவரோட டீமா?

நடிகர் சூரி- இயக்குனர் மதிமாறன் புகழேந்தி கைக்கோர்க்கும் புதிய படத்திற்கு “மண்டாடி” என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.