K U M U D A M   N E W S

இர்ஃபான் விவகாரம்... மருத்துவருக்கு பறந்த அதிரடி நோட்டீஸ்

யூடியூபர் இர்ஃபான் அவரது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் அதற்கு அனுமதித்த மருத்துவர் நிவேதிதாவிற்கு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மாணவன் மீது தாக்குதல்.. “ஊருக்குள் வாழ பயமா இருக்கு...” கிராம மக்கள் போராட்டம்

நெல்லையில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் தாக்கப்பட்ட விவகாரத்தில், ஊருக்குள் வாழ பயமா இருக்கிறது எனக்கூறி மக்கள் மலையில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறக்கினர்.

ஒடுக்கப்பட்ட சமுகத்தினரை குற்றப்பரம்பரையாக சித்தரிப்பதா? - ஆ. ராசா, எம்.பி.

‘பிராமணர்கள் பாதுகாப்பு வலியுறுத்தல்’என்ற போர்வையில் திமுக அரசுக்கு எதிராகக் களங்கத்தை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள் என ஆ. ராசா எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

நெல்லையில் மீண்டும் பயங்கரம்.. மாணவர் தலையில் பீர் பாட்டிலில் அடி.. வெளியான பகீர் சிசிடிவி காட்சி

நெல்லையில் காரில் மோதும்படியாக சென்றவர்களை பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கும்பலாக சென்று மாணவனை வீடு புகுந்து தாக்கியுள்ளனர். இந்நிலையில், அவர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பித்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

யூடியூபர் இர்ஃபான் விவகாரம் - பெண் மருத்துவருக்கு நோட்டீஸ்

யூடியூபர் இர்ஃபான் விவகாரத்தில் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. ஆட்டோ ஓட்டுனரின் வெறிச்செயல்

புதுச்சேரியில் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த 3 இளைஞர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

எடப்பாடி பழனிசாமி மனு - தயாநிதிமாறன் எம்.பி ஆட்சேபம்

எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான வாதங்களுக்காக, அவதூறு வழக்கு விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு தள்ளிவைப்பு

நண்பர்களுடன் பந்தயம்.. அநியாயமாக பறிபோன உயிர்.. வெளியான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

கர்நாடகா கோணனகுண்டே பகுதியைச் சேர்ந்த இளைஞர் தீபாவளியன்று நண்பர்களுடன் பந்தயம் கட்டி பட்டாசு வெடித்தபோது படுகாயமடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

உதயநிதியை வரவேற்க கோயில் பணம் செலவா?- எச்.ராஜாவுக்கு அமைச்சர் பதில்

நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பொய் சொல்வது புகார் சொல்வது தான் எச்.ராஜாவின் வாடிக்கை. அதனால் தான் அவரை தமிழ்நாட்டின் பாஜக  பொறுப்பாளராக வைத்துள்ளனர்.

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு - நடிகை கஸ்தூரிக்கு அமைச்சர் கொடுத்த பதில் 

எச்.ராஜா காலையில் எழுந்தால் இந்த ஆட்சி மீது பொல்லாங்கு பேசுவதையே வழக்கமாக வைத்துள்ளார். பொய் சொல்வது புகார் சொல்வதுதான் அவரது வாடிக்கை. அதற்காகத்தான் பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளராக வைத்துள்ளார்கள் என்று கூறினார்.