K U M U D A M   N E W S

அதிமுக கூட்டணி உறுதி? அதிரவைத்த எடப்பாடி

நாங்கள் கூட்டணி குறித்து மற்றக் கட்சிகளுக்கு அழைத்து விடுத்துள்ளோம் என்றும் பாஜக கூட்டணி இல்லை என்பதை ஏற்கனவே உறுதி தெரிவித்து விட்டேன் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மருத்துவர் மீது கத்திக்குத்து.. தமிழக அரசை கண்டித்து மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..!

அரசு மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்காத தமிழக அரசை கண்டித்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை,கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவர் பாலாஜியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

டிரம்ப் அமைச்சரவையில் தேசிய உளவுத்துறை தலைவராகிறார் துளசி கபார்ட் ..!

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அந்நாட்டின் தேசிய உளவுத்துறை தலைவராக துளசி கபார்ட்டை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல்.. எண்ணெய் சந்தைகள் நிலைமை என்ன.. ரஷிய அதிபரும்  சவுதி இளவரசரும் ஆலோசனை..!

ரஷிய அதிபர் விளாடிமிர் புடின்,  சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகிய இருவரும் பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல், எண்ணெய் சந்தைகள் நிலைமை பற்றி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

என் ரசிகர்களின் அன்பு தாய் பாசம் போன்றது - நடிகர் சூர்யா உருக்கம்

நடிகர் சூர்யாவின் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் இன்று உலகெங்கிலும் வெளியானது. இந்நிலையில், கங்குவா திரைப்படத்தின் ப்ரோமஷன் நிகழ்ச்சிகளில் சூர்யா தொடர்ந்து பங்கேற்று வரும் நிலையில், நடிகர் சூர்யாவின் பிரத்யேக பேட்டியை காண்போம். 

மகளிர் உரிமைத் தொகை...மக்கள் கொந்தளிப்பு... திமுக பயந்துவிட்டது... பாமக நிறுவனர் ராமதாஸ்!

பாமகவின் தொடர் வலியுறுத்தலுக்கு வெற்றி; அனைத்து மகளிருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை என்பது திமுகவின் தோல்வி பயத்தின் வெளிப்பாடு என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்களை பாதுகாக்க திமுக அரசுக்கு தெரியாதா?... கேள்விகளால் விளாசிய சீமான்... திணறும் திமுக!

“அரசு மருத்துமனைக்கு கலைஞர் பெயரைச் சூட்டுவதில் காட்டிய அக்கறையில் அணுவளவாவது அரசு மருத்துவர்களைப் பாதுகாப்பதில் திமுக அரசு காட்டாதது ஏன்?”என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

மருத்துவர்களின் பாதுகாப்பு நம்முடைய கடமை.. அரசு அரணாக திகழும் - துணை முதல்வர்

இரவு, பகல் பாராது மக்களை காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்களுக்கு அரசு என்றுமே பாதுகாப்பு அரணாகத் திகழும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறி... திமுக அரசு உணர வேண்டும்... அண்ணாமலை காட்டம்!

குற்ற நிகழ்வுகளைத் தடுக்காமல், ஒவ்வொரு முறையும், நடவடிக்கை எடுப்போம் என்று பெயரளவில் மட்டுமே முதலமைச்சர் கூறுவது, பொதுமக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தியிப்பதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.