சீட் கொடுக்காத அதிமுக..! க்ரீன் சிக்னல் கொடுத்த திமுக..! கூட்டணியை மாற்றும் தேமுதிக?
மாநிலங்களவை சீட் கொடுக்காத நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, திமுகவுடன் கூட்டணி வைக்க தேமுதிக முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மாநிலங்களவை சீட் கொடுக்காத நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, திமுகவுடன் கூட்டணி வைக்க தேமுதிக முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிமுக வசமுள்ள இரண்டு ராஜ்யசபா சீட் யாருக்கு என்பதில் இழுபறி நீடித்த நிலையில், இரண்டையும் நாங்களே எடுத்துக் கொள்கிறோம் என்று கூறி கூட்டணிக்கு கல்தா கொடுத்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இரண்டு ராஜ்யசபா சீட்டும் அதிமுக எடுத்துக் கொண்டுள்ளதால், தேமுதிகவின் நிலை என்ன? விரைவில் தெரியவரும்.
ஜனநாயகப்பூர்வ பொது வாழ்வில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வையும் எனது அரசியல் வாழ்வில் ஒரு கற்றலாகவே நான் எடுத்துக்கொள்கிறேன்.
திமுக பொதுக்குழுவில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
சாதிவாரிக் கணக்கெடுப்பை விரைவாகவும் முறையாகவும் நடத்திட வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுகவின் வேட்பாளர்களாக இன்பதுரை, தனபால் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். தேமுதிகவிற்கு 2026ல் ஒரு ராஜ்ய சபா சீட் வழங்கப்படும் எனவும் உறுதி
இன்றைய பொதுக்குழு வரவிருக்கும் சட்டமன்றத்தேர்தலை நோக்கி திமுகவின் நகர்வை வலுப்படுத்தும் ஒரு முக்கியமான கட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுகவிற்கு பெண்கள் மத்தியில் இருக்கும் ஆதரவை குறைக்கவே திமுக அரசை பா.ஜ.க C- டீமான விஜய் குறை கூறுகிறார் என்று திருச்சியில் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தே.மு.தி.க-விற்கு ஏற்கனவே 2 முறை எம்.பி. பதவி வந்த போது அன்புமணிக்கும், ஜி.கே.வாசனுக்கும் கொடுத்தார்கள். தேமுதிகவிற்கு ராஜ்யசபா கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை. இ.பி.எஸ் சொன்ன வார்த்தையை காப்பாற்ற வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கும் அதே நேரத்தில் ஆடு, மாடுகள் மாநாடு வைத்திருக்கிறேன் அதில் கலந்து கொள்வேன் சீமான் பேட்டி
அண்ணா பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தி.மு.க. நிர்வாகியான ஞானசேகரன் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதைத் தவெக வரவேற்கிறது என விஜய் எக்ஸ் தளப்பதிவு
சார்கள் பெண்களை சீரழித்து வருகின்றனர், தம்பிகள் பணத்தை சுரண்டி வருகின்றனர் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேச்சு
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு என்ற விஷயத்தில் ஜெயலலிதாவை மிகவும் இழக்கிறோம். தற்போது பாலியல் வன்கொடுமை என்பது பழகிப்போன ஒரு விஷயமாகிவிட்டது என நடிகை கஸ்தூரி பேட்டி
டெல்லிக்கு சென்று நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் உரிமைக்குரலை எழுப்பினேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆளும்கட்சியாக இருக்கும்போது கைகுலுக்கி காலில் விழுவதும்தான் இந்த கபட நாடக தி.மு.க. தலைமையின் பித்தலாட்ட அரசியல் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
நிதி ஆயோக் கூட்டங்களில் தமிழக முதல்வர் பங்கேற்காமல் எதிர்ப்பு தெரிவித்தது ஒரு அடையாள போராட்டம் என திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் பேட்டி
நாட்டின் நலனை எப்படி தி.மு.க. விட்டுக்கொடுக்காதோ, அதுபோல மாநில உரிமைகளையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க வின் மூத்த உறுப்பினரும் முன்னாள் அமைச்சர்ருமான திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி திவ்யபிரியா, மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலை கல்லார் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கட்சி பணிகளில் பெண்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறி தவெகவிலிருந்து வெளியேறிய வைஷ்ணவி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.
திமுக முன்னாள் நிர்வாகியான தெய்வசெயல் மீது அளித்த பாலியல் வன்கொடுமை புகாரை சிபிஐக்கு மாற்ற வேண்டி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முறையிடுவதற்காக உரிய அனுமதியின்றி ராஜ்பவன் சென்ற இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
”அன்புமணியும், ராமதாஸும் ஒன்றாக இணைந்து திமுகவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்; திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியே வரவேண்டும் என்றும் நான் விருப்பப்படுகிறேன்“ என நெல்லையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டியளித்துள்ளார்.
ஆப்ரேஷன் சிந்து வெற்றியை கொண்டாடும் விதமாக கோவையில் பா.ஜ.க வினர் நடத்திய மூவர்ண கொடி பேரணியில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க ஜெயராமன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திமுக நிர்வாகி தெய்வசெயல் ஏமாற்றி திருமணம் செய்ததாக கல்லூரி மாணவி புகார் அளித்த வழக்கில், புகார் மீது காவல்துறை அலட்சியம் காட்டுவதாக கல்லூரி மாணவி குற்றச்சாட்டிய வழக்கில், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து இந்த வழக்கு தொடர்பாக விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதிமுகவைச் சேர்ந்த சேவூர் ராமச்சந்திரன், இந்து சமய அறநிலை துறை அமைச்சராக இருந்தபோது ஏழு மடங்கு சொத்து சம்பாதித்ததாகவும், 2016ஆம் ஆண்டு 2 கோடி சொத்து இருந்த நிலையில் 2021ஆம் ஆண்டு14 கோடி மதிப்பில் சொத்துக்கள் சேர்த்திருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறு சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.