K U M U D A M   N E W S

டி

6 மாதங்களுக்கு பிறகு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்... சிபிஐ நடவடிக்கையை விமர்சித்த நீதிபதி!

''சில வழக்குகளில் சிபிஐ கைது செய்யும் தருணம் கேள்விகளை எழுப்புகிறது. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தபிறகு, சிபிஐ கைது நடவடிக்கையில் ஈடுபட்டது ஏமாற்றம் அளிக்கிறது. சிபிஐ கூண்டுக்கிளியாக இருக்கக் கூடாது’’என்று நீதிபதி உஜ்ஜல் புயன் தெரிவித்துள்ளார்.

’பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு’.. திமுக அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

''ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவதை அனைவரும் அறிவோம்'' என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கோயில் கட்டுமானம்... இடித்து அகற்றம்

கரூரில் அரசு அலுவலக வளாகத்தில் அரசாணைக்கு எதிராக விநாயகர் கோவில் கட்டுமானப் பணி நடைபெற்றது. பல்வேறு சமூக அமைப்பினரின் புகாரை அடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் இரவோடு இரவாக இடித்து அகற்றப்பட்டது 

நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர்.. ஏன் தெரியுமா?

'' ஒவ்வொரு உணவுக்கும், எவ்வளவு வரி நிர்ணயிக்க வேண்டும் என்பது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் விரிவாக ஆய்வு மேற்கொண்டுள்ளது. தொழில் அதிபர்களின் பரிந்துரைகள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்'' என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் தெரிவித்துள்ளார்.

#BREAKING || தீ விபத்தில் சிக்கிய யானை உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தீ விபத்தில் சிக்கிய குன்றக்குடி ஸ்ரீ சண்முகநாதன் கோயில் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. கோயில் மலை அடிவாரத்தில் யானை கட்டி போட்டு இருந்த போது நிழல் குடையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியது.

சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

This Week OTT Release: ரகு தாத்தா, நண்பன் ஒருவன் வந்த பிறகு... இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் அப்டேட்ஸ்!

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரகு தாத்தா, நண்பன் ஒருவன் வந்த பிறகு உள்ளிட்ட மேலும் சில படங்கள், வெப் சீரிஸ்கள் இந்த வாரம் (செப்.13) ஓடிடி தளங்களில் வெளியாகின்றன.

ரெயின் கோட்-ஐ எடுத்துக்கோங்க... தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு என எச்சரிக்கை!

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஸ்டாலின் உதவாக்கரை என்று சொல்லிவிடுங்கள்... திமுக செய்யும் ஹிட்லர் ஆட்சி.. ஆர்.பி. உதயகுமார் ஆவேசம்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைத்து மாவட்டத்திற்கும் சென்று வளர்ச்சி கூட்டத்தில் கதாநாயகன் போல் ஆய்வு செய்ய யார் உரிமை கொடுத்தது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏன் நாம் வடிவேலுவைக் கொண்டாடுகிறோம்!

Comedy Actor Vadivelu 64th Birthday Special Story in Tamil : நம் காலத்தின் மகத்தான ஒரு திரைப்படக் கலைஞனான வடிவேலு என்றும் போற்றுதலுக்குரியவர். தமிழ்த் திரையுலகின் வழியே அவர் நம் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து விரிவாகப் பேசுகிறது இக்கட்டுரை.