K U M U D A M   N E W S
Advertisement

அரசு

"திமுக அரசின் அலட்சியத்தால் 2 போலீசார் பலி" - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக அரசின் அலட்சியத்தால் 2 பெண் போலீசார் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இதுபோன்ற துயரச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மும்மொழி கொள்கையைத் திணிப்பதுதான் திராவிட மாடலா?- சீமான் சரமாரி கேள்வி

மும்மொழி தெரிந்தால்தான் தமிழ்நாட்டின் அரசுத்துறைகளில் வேலைவாய்ப்பு என்கிற திமுக அரசின் மறைமுக இந்தி திணிப்பு நடவடிக்கைகள் யாவும், தமிழ் மண்ணில் இன்னொரு மொழிப்போருக்கே வித்திடும் எனவும், அந்தத் தீயில் திராவிடம் செய்யும் துரோகங்கள் யாவும் மொத்தமாய் எரிந்து சாம்பலாகும்

செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு

மிக்ஜாம் புயல் காரணமாக சேதமடைந்த செம்பரம்பாக்கம் ஏரிக்கரைகளை சீரமைக்க நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்காக ரூ.22 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

சர். பிட்டி தியாகராயர் அரங்கத்தின் வாடகையை மும்மடங்கு உயர்த்துவது எளியவர்களின் பொது நிகழ்ச்சிகளுக்கு எழுதப்படும் முடிவுரையாகிவிடும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்கு முன்னே வந்த மிக முக்கிய அறிவிப்பு..

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக இருந்த 2,877 இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் எஸ்சி, எஸ்டி பிரிவுக்கு 307 டிசிசி மற்றும் 462 தொழில்நுட்ப பணி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரைநாள் விடுமுறை.. தமிழக அரசு கொடுத்த கிஃப்ட்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரை நாள் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.426.32 கோடியில் கட்டப்பட்டுள்ள 3,268 அடுக்குமாடி குடியிருப்புகளை கானொளி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழகமே திரும்பி பார்க்க இபிஎஸ் சொன்ன வார்த்தை...

அரசுக் கல்லூரிகளில் கௌரவ உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நிரந்தரமாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தொகுதிப் பார்வையாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்.... எப்போதும் உழைக்க வேண்டும்!

தலைவர் கலைஞர் தனக்குப் பிடித்த ஊரின் பெயராக, தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ‘எப்போதும் வென்றான்’ ஊரைச் சொல்வார். எப்போதும் வென்றானாக நாம் பெயர் பெற வேண்டும் என்றால், எப்போதும் உழைக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை.. எடப்பாடி பழனிசாமி அரசுக்கு வலியுறுத்தல்

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும் என திமுக அரசு அறிவித்திருந்தது. உடனடியாக கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையை வழங்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.