பக்தர்களுக்கு குட் நியூஸ் - சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு
மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு உள்ளது.
மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு உள்ளது.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் அனுர குமார திசநாயக அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 225 இடங்களில் 159 இடங்களை தேசிய மக்கள் சக்தி கட்சி கைப்பற்றியது.
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, தஞ்சாவூர் பெருவுடையாருக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட ஆயிரம் கிலோ அன்னம் மற்றும் 500 கிலோ காய்கறிகள் மற்றும் பழ வகைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பிரபல சைவ உணவகத்தில் சிறுவனுக்கு வழங்கப்பட்ட சாம்பார் சாதத்தில் கண்ணாடித் துண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விமர்சனம் செய்யும் போது கண்ணியத்துடனும், எச்சரிக்கையுடனும் பேச வேண்டும் என்று சி.வி.சண்முகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
சென்னை கண்ணகி நகரை சேர்ந்த தம்பதியின் குழந்தையை கடத்திய பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு, தலைமறைவாக உள்ள பெண்ணை பிடிக்க காவல் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஜார்கண்ட்டில் பிரதமர் நரேந்திர மோடி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கின் விசாரணை நவம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில், தாய்-சேய் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, பணியிலிருந்த டாக்டர் சியாமளா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை குன்றத்தூரில் எலி மருந்தால் மூச்சு திணறி குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெற்றோர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள 131 கடைகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 89 கடைகளிலும் என மொத்தம் 220 கடைகளில் இன்று முதல் மதுபாட்டில்களுக்கு பில் வழங்கும் முறை நடைமுறைக்கு வந்தது.
சென்னை குன்றத்தூரில் எலி மருந்தால் மூச்சு திணறி குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், 12 இடங்களில் எலி மருந்து வைத்ததால் நெடி அதிகரித்து குழந்தைகள் உயிரிழந்ததாக போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், ஏர் இந்தியாவின் 10 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
கொடநாடு வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக எடப்பாடி பழனிசாமியை ஏன் விசாரிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கடைமுக தீர்த்தவாரி இன்று கோலாகலமாக நடைபெற்றது.
கேரள மாநிலம் கண்ணூரில் கூகுள் மேப் பார்த்து பயணம் செய்த நாடகக்குழுவினர் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளானதில், 2 பேர் உயிரிழந்த நிலையில், 9 பேர் காயமடைந்துள்ளனர்.
நடிகர் ஜெயம் ரவி - மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து வழக்கை நவம்பர் 27-ம் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
தெலங்கானாவில் மோசடி செய்த பணத்தை பங்குபோடுவதில் ஏற்பட்ட தகராறில் கள்ளக்காதலியை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த கள்ளக் காதலனை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.
பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் வயிற்று வலி காரணமாக சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
சரியான முறையில் சிகிச்சை அளிக்காததால் நோயாளி உயிரிழந்ததாக கூறி சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தஞ்சை புறவழிச்சாலை ஓரங்களில் கொட்டப்பட்ட குப்பை மற்றும் இறைச்சிக் கழிவுகள் அங்கேயே எரிக்கப்படுவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதி அடைந்துள்ளனர்.
ஜனநாயகத்தை வலுப்படுத்துவது கூறிக் கொண்டு திமுக - அதிமுக கட்சியினரும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை கூறுகின்றனரே தவிர, நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
ஜெயம் ரவி, ஆர்த்தி இடையே சமரச தீர்வு மையத்தின் மூலம் பேச்சுவார்த்தை நடத்த சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. விவாகரத்து வழக்கில் ஜெயம் ரவி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான நிலையில், ஆர்த்தி காணொளி காட்சி மூலம் ஆஜரானார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே இடையப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியின் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.