K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=17275&order=created_at&category_id=12

கூல் லிப் பாக்கெட்டில் ஏன் மண்டை ஓடு படம் இல்லை - நீதிமன்றம் கேள்வி

மாணவர்கள், இளைஞர்களை பெரிதும் பாதிக்கும் கூல் லிப் உள்ளிட்ட குட்கா பொருட்களை முற்றிலும் தடை செய்யக்கோரிய வழக்கில், கூல் லிப் போன்ற போதைப்பொருள் பயன்பாட்டை குறைக்க எம்மாதிரியான வழிகாட்டுதல் வழங்கலாம் என மத்திய, குட்கா நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 

ஆளுநரிடம் புகார்.. நேரடி விசிட் அடித்த அமைச்சர்..பாரதியார் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தரமில்லாத உணவு வழங்கப்படுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மாணவர் புகாரளித்த நிலையில், உணவு விடுத்திக்கு சென்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் ஆய்வு மேற்கொண்டார்.

100 ஏக்கர் ஒரே நாளில் நாசம்.. வேதனையில் குமுறும் விவசாயிகள்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கனமழையால் நெல் நாற்று நட தயாராக இருந்த 100 ஏக்கர் விலை நிலங்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகினர். 

"வடகிழக்கு பருவமழை.. வதந்திகளை நம்ப வேண்டாம்.." - பொதுமக்களுக்கு முதலமைச்சர் அறிவுரை

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். அரசு அலுவலர்கள் அளிக்கும் முறையான முன்னெச்சரிக்கைகளின்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்...

தமிழ்நாட்டில் இன்று விழுப்புரம், கடலூர், அரியலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை மட்டுமே தமிழகம் இல்லை - தமிழக அரசுக்கு EPS கண்டனம்

தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு, நிவாரண நடவடிக்கையை எடுக்காமல் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்துவதா என இபிஎஸ் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

சீமான் மீது வழக்கு பதிந்து விசாரணைய தொடங்குங்க... நீதிமன்றம் அதிரடி

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறு வார்த்தைகளை பயன்படுத்தி பாடல் பாடியதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அளிக்கப்பட்ட புகாரில் அவர் மீது வழக்கு பதிந்து விசாரணை செய்ய போலீசாருக்கு கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சிலைக்கடத்தல் வழக்கு... முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு முன் ஜாமின் நிபந்தனையில் தளர்வு

சிலைக் கடத்தல் வழக்கில் முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு விதிக்கப்பட்ட முன்ஜாமின் நிபந்தனைகளை தளர்த்தியது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  

அக்டோபரை விட நவம்பரில் அதி கனமழை.. இப்போதே எச்சரித்த வெதர்மேன்

அக்டோபர் 16, 17ம் தேதிகளில் சென்னையில் கனமழை பெய்தாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

சாம்சங் தொழிற்சங்கத்தினர் தொடர்ந்த வழக்கு.. அக். 16ல் விசாரிப்பதாக அறிவிப்பு

சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக்கோரி தொடர்ந்த வழக்கை உடனடியாக விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழிற்சங்கத்தினர் முறையீடு செய்தனர். இந்த வழக்கை வரும் 16ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

"24 மணி நேரமும் வேலை" மெல்ல நெருங்கும் அபாயம் - அதிகாரிகளுக்கு உடனே பறந்த உத்தரவு

வடகிழக்கு பருவமழை நாளை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று சிகிச்சை அளிக்க மருத்துவ குழுக்கள் தயாராக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது

பட்டம் வழங்கிய ஆளுநர்.. மனு கொடுத்த மாணவர்.. பாரதியார் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பட்டம் வழங்கிக்கொண்டிருந்த ஆளுநரின் கையில் மாணவர் ஒருவர் மனு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரெட் அலர்ட்.. ககன் தீப் சிங் அதிரடி ஆய்வு

சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அடையாறு கால்வாயில் ககந்தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார்.

பிரபல ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்... விரைந்த போலீசார்.. ஊட்டியில் பரபரப்பு

நீலகிரி மாவட்டம் உதகையில் பிரபல ஹோட்டலுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர்

கனமழை எதிரொலி.. நாளை 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை எதிரொலியாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

உரத்திற்கு பதில் களிமண்... வைரலான வீடியோவால் விவசாயிகள் அதிர்ச்சி

கடலூரில் போராட்டம் நடத்தியும் போலி உரங்களை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். போலி உரங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் பட்டியல் மற்றும் போலி உரங்களின் பெயர்கள் சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகை சித்ரா வழக்கில் புதிய திருப்பம்.. ஹேம்நாத்துக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக அவரது தந்தை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சித்ராவின் கணவர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

திருச்செந்தூர் கோயிலில் தங்கும் விடுதியை திறந்து வைத்த முதலமைச்சர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.68.36 கோடியில் ரூ.68.36 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 

ரயில் விபத்து.. விசாரணைக்காக 4 பேர் ஆஜர்

கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக பொன்னேரி ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட 4 பேரிடம் சென்ட்ரல் ரயில்வே போலீஸ் டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை... ஆவின் நிர்வாகம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் பால் தங்கு தடையின்றி மக்களுக்கு கிடைக்க ஆவின் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகளில் 9,000 கிலோ பால் பவுடர் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் போராட்டத்தை தொடங்கிய சாம்சங் நிறுவன ஊழியர்கள்

தொடர் விடுமுறைக்கு பின்னர் சாம்சங் நிறுவன ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். சுங்குவார்சத்திரத்தில் ஏற்கனவே போராட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து 500 மீ தொலைவில் பந்தல் அமைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சவர்மா சாப்பிட்டதால் நேர்ந்த பரிதாபம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

புதுக்கோட்டை ஹோட்டலில் சவர்மா சாப்பிட்ட 7 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ரெட் அலர்ட்.. சென்னை விரையும் பேரிடர் மீட்பு படை

சென்னைக்கு வரும் 16ம் தேதி அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லையில் இருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படை சென்னை விரைகிறது.

மழை முன்னெச்சரிக்கை... தீயணைப்பு துறையினருக்கு பறந்த முக்கிய உத்தரவு

மழைக்கால மீட்பு பணிகளுக்காக தீயணைப்புத் துறை அனைத்து வீரர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் என தீயணைப்புத்துறை டிஜிபி ஆபாஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

வடகிழக்கு பருவமழை.. கண்காணிப்பாளர்கள் நியமனம்

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், சென்னையின் திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட 15 மண்டலங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.