வாகன ஓட்டிகளே ரிஸ்க் வேண்டாம்.. தத்தளிக்கும் மாதவரம்..!
சென்னை மாதவரம் வடதிருப்பாக்கம், வடகரை ஆகிய முக்கிய சாலைகளில் வெள்ளம் போல் சூழ்ந்துள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னை மாதவரம் வடதிருப்பாக்கம், வடகரை ஆகிய முக்கிய சாலைகளில் வெள்ளம் போல் சூழ்ந்துள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னையில் பெய்து வந்த கனமழை ஓய்ந்தும் வெள்ள நீர் வடியாததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். அத்தியாவசிய தேவைக்கு கூட வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளதால் அரசு உடனடியாக இதை சீர் செய்து தர வேண்டும் என கோரிகை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் மஞ்சக்குட்டை கிராமம் செல்லும் மலைப்பாதையில் மரம் வேரோடு சாய்ந்து மின் கம்பம் மீது விழுந்தது. இதையடுத்து வரிசையாக மின் கம்பங்கள் சாலையில் சாய்ந்த நிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து மழை பெய்தால் அருகே உள்ள கண்மாய்களும் நிரம்பும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பழைய ஆயக்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பாதிக்கப்படும் பகுதிகளில் NDRF வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.
கோவை மாவட்ட ஆட்சியரின் வாகனம் முன்பு பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு.
Today Headlines : 01 மணி தலைப்புச் செய்திகள் | 01 PM Headlines Tamil | 16-10-2024 | Kumudam News24x7
சென்னை துரைப்பாக்கம் அடுத்த மேட்டுக்குப்பம் பகுதியில் 2 நாட்களாக வடியாத மழைநீர்.
சென்னையில் நேற்று 16 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. எந்த பாதிப்பும் இன்றி கூடுதல் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மழைநீர் தேங்கிய 539 இடங்களில் 436 பகுதிகளில் அகற்றப்பட்டு விட்டதாகவும் மீதமுள்ள 103 இடங்களில் மழை நீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் கை கொடுத்துள்ளது என தெரிவித்தார்.
சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
கோவையில் தொடர் கனமழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவான 44.61 அடியில் தற்போது நீர்மட்டம் 43.49 அடியாக உள்ளது.
சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நல்லூர் சுங்கச்சாவடியில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. 7 கவுன்ட்டர்கள் உள்ள நிலையில் மழை நீர் தேக்கம் காரணமாக 2 கவுன்ட்டர்கள் வழியாக மட்டுமே வாகனங்கள் மழை நீரில் ஊர்ந்தபடி செல்கின்றன.
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள மேட்லி சுரங்கப்பாதையில் தூய்மைப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மழைநீருடன் அடித்து வரப்பட்ட குப்பைகள், மண்ணை அப்புறப்படுத்தும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னையில் அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி அழிக்கால், பிள்ளைத்தோப்பில் கடல் சீற்றம் காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல்நீர் புகுந்தது. 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்ததால் உடைமைகள் சேதமடைந்தன.
சென்னை பாரிமுனையில் மழைநீர் தேங்கியிருந்த பகுதிகளில் தண்ணீர் வடிந்தது. பல்வேறு சாலைகளில் தேங்கியிருந்த மழைநீர் வடிந்து போக்குவரத்து சீரானது.
கனமழை காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று ரூ.120க்கு ஒரு கிலோ தக்காளி விற்கப்பட்ட நிலையில், வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை குறைந்து கிலோ ரூ.90க்கு விற்பனையாகிறது.
தமிழகத்தை போன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பெங்களூர் மாநகராட்சி அலுவல கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆய்வு மேற்கொண்டார்.
பல்வேறு இடங்களில் பெய்த கனமழை... மக்கள் அவதி
காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கே சுமார் 360 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் ஞானமணி நகரில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது