K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=17000&order=created_at&category_id=12

உணவின் தரம் குறித்து புகார்... தனிமை சிறையில் அடைக்கப்பட்ட கைதி..? நீதிமன்றம் அதிரடி உததர்வு

புழல் சிறையில் உணவின் தரம் குறித்து புகார் அளித்ததற்காக விசாரணை கைதி தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து சிறை நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் பயிற்சி மையத்தில் நடந்த கொடூரம்.. அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி உண்மைகள்

நெல்லையில் நீட் பயிற்சி மைய விடுதி அனுமதி இல்லாமல் செயல்படுவது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து விளக்கமளிக்கக்கோரி சமூக நலத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பட்டா கேட்டு போராட்டம்.. அமைச்சர் மூர்த்தி விமர்சனம்

பட்டா கேட்டு பெண்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்திய நிலையில், புகழுக்காக தகுதியில்லாதவர்களுக்கு பட்டா வாங்கி தருவதாக கூறி ஏமாற்றுபவர்களை நம்ப வேண்டாம் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

தீட்சிதர்கள் கடவுளை விட மேலானவர்கள் அல்ல - நீதிபதி ஆவேசம்

சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் கடவுளை விட தாங்கள் மேலானவர்கள் என நினைக்கக்கூடாது. மன கஷ்டங்களுக்காக கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவமானப்படுத்தப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்தனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. அஞ்சலை மீதான குண்டர் சட்டம்.. காவல்துறை பதிலளிக்க உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை-யை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொடூர கொலை... விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

திருப்பூர் பல்லடம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் நடந்தேறியுள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணையை துவக்கியுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - ஜாமின் மனு தள்ளுபடி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மக்களுக்கு குட் நியூஸ்..!! ரூ.90 லட்சத்தில் அமைகிறது ஆராய்ச்சி பூங்கா

கோவையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.90 லட்சத்தில் ஆராய்ச்சி பூங்கா அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம்

ஆளுநருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திராவிடநல் திருநாடும் என்று எழுதி ஆளுநருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ராயப்பேட்டையில் நடைபெற்றது.

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை

அரசு ஊழியர்கள், பொதுமக்கள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 1ம் தேதி அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.   

கோயம்பேட்டில் தேங்கி நிற்கும் மழைநீர்.. அதிருப்தியில் வியாபாரிகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் மழைநீர் அப்புறப்படுத்தப்படாமல் இருப்பதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

முதலமைச்சர் தொகுதியில் இப்படி ஒரு அவலமா..? - மக்கள் கடும் வேதனை

சென்னை கொளத்தூர் பகவதி அம்மாள் தெருவில் மழைநீர் வடியாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. அதனுடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

மீண்டும் இணையும் தனுஷ், ஐஸ்வர்யா? - சமரச முயற்சியில் திடீர் டுவிஸ்ட்

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து கோரிய வழக்கு விசாரணையில் இருவரும் ஆஜராகாததால் வழக்கின் விசாரணையை நவம்பர் 2ம் தேதிக்கு தள்ளி வைத்தது சென்னை குடும்ப நல நீதிமன்றம்

பெற்றோர்களை தவிர மற்றவர்களின் கால்களில் விழக்கூடாது - புஸ்ஸி ஆனந்த்

எதிர்பார்ப்பில்லாமல் உழைப்பவர்களுக்கு கட்சியில் அங்கீகாரம் கிடைக்கும் எனவும், பெற்றோர்களை தவிர மற்றவர்களின் கால்களில் விழக்கூடாது எனவும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.     

தாயின் கண் முன்னே உடல் நசுங்கி பலியான மகன்.. நடுரோட்டில் கதறி அழுத குடும்பம்

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே சாலை விபத்தில் தாயின் கண் முன்னே மகன் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் காயமடைந்த தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீணாய் போகும் மக்கள் பணம்... கொட்டும் மழையில் தார் சாலை..

காஞ்சிபுரம் அருகே உள்ள பாலாற்று மேம்பாலத்தில் கொட்டும் மழையில் நெடுஞ்சாலைத்துறையினர் தார் சாலை அமைத்து வருகின்றனர். மழை பெய்யும்போது தார் சாலை அமைத்தால் எப்படி தரமாக இருக்கும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஷாக் அடிக்கும் தங்கம் விலை..!! - வரலாறு காணாத உச்சம்..

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து ரூ.58,240க்கு விற்பனையாகிறது

தென் மாநில காவல்துறை இயக்குனர்கள் ஒருங்கிணைப்பு மாநாட்டில் முதலமைச்சர் உரை

தென் மாநில காவல்துறை இயக்குனர்கள் ஒருங்கிணைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

20ம் தேதி முதல் பேராபத்து நிச்சயம்.. ஆட்டம் காட்டப்போகும் இயற்கை..

வங்கக்கடலில் வரும் 22ம் தேதி மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும், வரும் 24ஆம் தேதி அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அழுகிய முட்டைகளில் கேக்... பேக்கரியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய அதிகாரிகள்

திருச்சி தென்னூரில் அழுகிய முட்டைகளில் கேக், பிரட் தயாரித்த இரண்டு பேக்கரிக்கு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சீல் வைத்தனர்.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 19-10-2024

மாவட்ட செய்திகள்

புதுச்சேரியை டார்கெட் செய்த கனமழை - விடிந்ததும் விழு பிதுங்கும் மக்கள்

புதுச்சேரியில் பரவலாக அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.

பூர்விகா; 3 வது நாளாக தொடரும் ரெய்டு

பூர்விகா நிறுவனம் வரி ஏய்ப்பு புகாரின் பேரில் பூர்விகா உரிமையாளர் யுவராஜ் வீட்டில் வருமான வரித் துறை சோதனை.