தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் - இது தான் லாஸ்ட் டேட்!
இன்று முதல் சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
இன்று முதல் சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
Today Headlines : 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Today Headlines Tamil | 02-11-2024
காமராஜின் அரசியல் எதிரி முத்துராமலிங்க தேவரா ? - VS Navamani Interview
Fantastic-ஆ இருக்கு.. எல்லாமே UPI-ல தான்.. இது ஒன்னு தான் இங்க பிரச்சனை.. | Kalaignar Centenary Park
2026-ல் TVK Vijay-க்கு வெற்றியா ? Vijay vs Udhayanidhi போட்டி உறுதி கணிக்கும் Jothidar Ramji
தவெக மாநாட்டை நடத்தியுள்ள விஜய்க்கு நடிகர் அஜித் சில அட்வைஸ் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நவம்பர் 2ஆம் வாரத்தில் தமிழ்நாட்டில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு
குடிநீருக்காக பயன்படும் வைகை ஆற்றை மாநகராட்சி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டாமா என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் வைகை ஆற்றில் குப்பை போடுவோர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 19 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க கவசம் நினைவாலய பொறுப்பாளர் முன்னிலையில் அகற்றப்பட்டு பெட்டிக்குள் பாதுகாப்பாக வைத்து ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மதுரை வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.
தை பிறந்தவுடன் காங்கிரஸ் கட்சிக்கு வழிபிறக்கும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடித்த 156 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
எல்லைப் போராளிகளின் தியாகங்களை நினைவு கூருவோம் என தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வெள்ளப்பட்டி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் மாமூல் கேட்டு ஊழியரை இளைஞர் சிலர் தாக்கியுள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
தொடர் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் அந்த பகுதியில் நிலவுகிறது.
அருவியின் நீர்ப்படிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கும்பக்கரை அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு கோவை ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக பக்தர்கள் வழிபாடு நடத்தினர். பக்தர்களின் வருகை அதிகரித்ததை அடுத்து 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மிக்ஜாம் புயல் காரணமாக சேதமடைந்த செம்பரம்பாக்கம் ஏரிக்கரைகளை சீரமைக்க நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்காக ரூ.22 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் மின்னணு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து சான்றளிக்க வல்லுநர்களை நியமிக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, இதனால் மங்கலம் - கல்லூரி சாலையை இணைக்கும் தரைப்பாலம் மூழ்கியது. இதையடுத்து தரைப்பாலத்தை பொதுமக்கள் கடக்காமல் இருக்க இரும்பு வேலிகள் அமைத்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறையையொட்டி குற்றாலம் சென்ற சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையையொட்டி சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர். வழியில் உள்ள நீரோடைகளில் குளிக்கவும், இரவில் கோயிலில் தங்கவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நாளை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு ‘தமிழ்நாடு நாள்’ என அறிவிக்கப்பட்ட நாள் இன்று; தமிழ்நாடு உருவாகக் காரணமாக இருந்த அனைத்து தியாக உள்ளங்களையும் இந்நன்னாளில் போற்றுவோம் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள் இன்று. போராடிய அனைவரையும் எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளில் போற்றி வணங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு
பழநி முருகன் கோயிலில் தீபாவளி தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் குவிந்தனர், 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.