K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

Gutka Case : குட்கா வழக்கு.. குற்றப்பத்திரிகை தயார்.. CBI தரப்பில் தகவல்

Gutka Malpractice Case Charge Sheet : குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றப்பத்திரிகை தயாராக உள்ளதாக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் CBI தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு.. சி.வி.சண்முகத்துக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து அவதூறாக பேசிய வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்.. ஆபத்தை உணராமல் பயணிக்கும் மக்கள்

தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் திருக்கோவிலூர் - அரகண்டநல்லூரை இணைக்கும் தரைப்பாலத்தின் ஒருபகுதி அடித்து செல்லப்பட்டது. ஆனால் ஆபத்தை உணராமல் பாலத்தின் ஓரமாக வாகன ஓட்டிகள் இருசக்கர வாகனத்தில் பயணிப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது

ஆஸ்கர் விருதுக்கு லாப்பட்டா லேடீஸ் பரிந்துரை

ஆஸ்கர் விருது சிறந்த வெளிநாட்டு பட பிரிவுக்கு கிரண்ராவ் இயக்கிய லாப்பட்டா லேடீஸ் இந்திய பிலிம் சேம்பர் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  தங்கலான், வாழை, மகாராஜா, ஜமா, கொட்டுக்காளி, ஜிகர்தண்டா டபுள் எக்சல் ஆகிய படங்கள் போட்டியில் இருந்தன

"எங்களுக்கு வீடு ஒதுக்கவில்லை.."போராட்டத்தில் இறங்கிய மக்கள்..எழும்பூரில் பரபரப்பு

எழும்பூர் கண்ணப்பர் திடல் அமைச்சர் உதயநிதி மூலக்கொத்தளம் திட்ட பகுதியில் குடியிருப்பு ஒத்துக்கீடு செய்து அதற்கான ஆணைகளை வழங்கினார். இந்திய 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களுக்கு வீடு ஒதுக்கவில்லை எனக் கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

டெல்லி முதலமைச்சராக பொறுப்பேற்றார் அதிஷி

டெல்லியில் 8வது முதலமைச்சராக அதிஷி பொறுப்பேற்றுக்கொண்டார். டெல்லி சட்டப்பேரவை கூட்டத்தொடர் செப்டம்பர் 26,27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது

லட்டு விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், லட்டு விவகாரத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்

அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு.. டிட்டோஜாக் முற்றுகைப் போராட்டம் ஒத்திவைப்பு

31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டிட்டோஜாக் குழுவுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து முற்றுகை போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக டிட்டோஜாக் குழு அறிவித்தது.

மீனவர்களை விடுவிக்கக்கோரி முதலமைச்சர் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Arakkonam : திடீரென பெயர்ந்து விழுந்த மேற்கூரை பூச்சு.. அரக்கோணம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு!

Arakkonam Bus Stand Roof Top Collapse : ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் புதிய பேருந்து நிலைய வளாக மேற்கூரை பூச்சு பெய்ந்து விழுந்ததால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதை சரிசெய்து தர நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.