சட்டென மாறிய Climate.. சில்லென மாறிய சென்னை
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தாமிரபரணி ஆற்றின் தூய்மையை பாதுகாக்கவில்லை என்றால் தாமிரபரணி ஆறு கூவமாக மாறிவிடும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் தேவைப்பட்டால் ரகசிய விசாரணை மேற்கொள்ளபடும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் மாவட்ட சித்தா மருத்துவ அலுவலர் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்ட நிலையில் 15க்கும் மேற்பட்ட சித்தா கிளினிக்குகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அனுமதியின்றி நோ பார்க்கிங் போர்ட் வைப்பதற்கு போக்குவரத்து காவல்துறை தடை விதித்துள்ளது. மீறுவோர் மீது நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தின் 166வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. அதில் ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபி ஜாங்கிட் குற்றவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.
சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக உள்ள எஸ்.அல்லி உயர்நீதிமன்ற தலைமை பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
National Green Tribunal : பள்ளிக்கரணை சதுப்புநிலம், வேளச்சேரி நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பாக உள்ள அரசு கட்டிடங்களை அகற்றி அதை கிண்டி ரேஸ் கிளப்புக்கு இடமாற்றலாம் அல்லது ரேஸ் கிளப் நிலத்தை புதிய நீர்நிலையாக மாற்றலாம் என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் யோசனை தெரிவித்துள்ளது.
Private School Fees Hike in Chennai : சென்னை மடிப்பாக்கத்தில், அதிக கட்டணம் வசூலிப்பதாகக் கூறி ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியை மாணவர்களின் பெற்றோர் முற்றுகையிட்டனர். இதனால் ஒருமணி நேரத்திற்கும் மேலாக சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Fishermen Protest in Pondicherry : புதுச்சேரியில் கடற்கரை ஓரம் தூண்டில் முள் வளைவு அமைக்காத்தை கண்டித்து மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னை செல்லும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.