K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

காவு வாங்கிய கள்ளச்சாராயம்... தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை

பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து மாகர் மற்றும் அவுரியா ஊராட்சிகளின் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் 

நிறுத்தப்பட்ட இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட் போட்டி.. காரணம் என்ன?

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வந்த இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு.. முக்கிய சாட்சியை ஏர்போர்ட்டில் சுற்றி வளைத்த போலீஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சுரேஷ் கிருஷ்ணா என்பவர் சாட்சியாக சேர்க்கப்பட்டு விசாரணைக்கு அழைத்து ஆஜராகாமல் இருந்து வந்தார். இதைத்தொடர்ந்து லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் வைத்து அவரை பிடித்த தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

"ஒரு மாத ஊதியம் போனஸாக வேண்டும்" - தூய்மை பணியாளர்கள் போராட்டம்

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஒரு மாத ஊதியத்தை போனஸாக வழங்கக்கோரி மாநகராட்சி அலுவலகத்தை 2வது நாளாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன...?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7,160க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.57,280க்கு விற்பனையாகிறது.  

தொடங்கியது இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட் போட்டி

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடி வருகிறது.  

2 நாளில் 11.84 லட்சம் பேருக்கு அம்மா உணவகங்களில் இலவச உணவு..

கனமழை பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2 நாட்களில் 11.84 லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கை.. 213 மருத்துவ முகாம்கள் அமைப்பு

சென்னையில் மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கையாக 213 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மருத்துவ முகாம்களுக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

தி.மலையில் செங்கம் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு.

மேட்டூர் அணைக்கு தொடர்ந்து அதிகரிக்கும் நீர்வரத்து

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 16,196 கன அடியில் இருந்து 19,495 கன அடியாக அதிகரிப்பு.