கன்னியாகுமரியில் ஏற்பட்ட ராட்சத அலை இழுத்து செல்லப்பட்ட கட்டுமானங்கள் | Kumudam News 24x7
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டிணம் பகுதியில் சீரமைப்பு பணிக்கான கட்டுமானங்களை கடல் அலை இழுத்துச் சென்றது.
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டிணம் பகுதியில் சீரமைப்பு பணிக்கான கட்டுமானங்களை கடல் அலை இழுத்துச் சென்றது.
சென்னையில் உள்ள சில முக்கியமான பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
12 PM Speed News | விரைவுச் செய்திகள் | 18-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தனியார் பள்ளி பேருந்துகள் முந்தி செல்ல முயன்றபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 மாணவிகள் காயமடைந்த நிலையில் பேருந்தை சிறை பிடித்து பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் நிகழ்ந்த சாலை விபத்தில் ராதா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் பொய்கை ஊராட்சி அலுவலக கட்டடத்தில் மழைநீர் ஒழுகி தேங்கியதில் கணினி, பேட்டரிகள், சான்றிதழ்கள் சேதமடைந்தன. உடனடியாக அலுவலகத்தை சீரமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தாழ்தள பேருந்து சேவையை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
திருப்பத்தூர் மாவட்டம் பூனைக்குட்டை பள்ளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் வாயிலை பூட்டி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை சிறுவாணி அணையின் மொத்த கொள்ளளவான 44.61 அடியில் தற்போது நீர்மட்டம் 43.56 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
காலநிலை மாற்ற வீராங்கனைகள் திட்டத்தை செயல்படுத்த ரூ.3.87 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 100 மின்சார ஆட்டோ வாங்க ரூ.3.77 கோடியும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ரூ.10.80 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது