சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவது எடப்பாடி பழனிசாமி மற்றும் அக்கட்சியின் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதால், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடையே கடும் அதிருப்தி நிலவியது. குறிப்பாக, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தி அணி உருவானது. சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பின் வேலுமணி மீண்டும் இபிஎஸ் பக்கம் திரும்பினாலும், மற்றவர்கள் கட்சித் தலைமையைப் புறக்கணித்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக, அதிருப்தி அணியில் இருந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய 4 எம்.எல்.ஏ.க்கள் ஏற்கனவே தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துவிட்டனர்.
இந்த வரிசையில், தற்போது தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துள்ள முக்கிய முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் தவெகவில் இணைய முடிவு செய்துள்ளனர். சி.விஜயபாஸ்கர் நேற்று தவெகவில் இணையவிருந்த நிலையில், பிரபல நடிகரும் இயக்குநருமான பாக்யராஜின் மறைவு காரணமாக அந்த நிகழ்ச்சி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் நாளை மறுநாள் (ஜூலை 2) தங்களது 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன், முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LIVE 24 X 7