தமிழ்நாடு

தங்கம் விலை கடும் உயர்வு.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை கடும் உயர்வு.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
Gold Rate
சென்னையில் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,680 வரை அதிரடியாக உயர்ந்துள்ளது.

தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரத் தொடக்கம் முதலே ஏறுமுகத்தில் காணப்படுகிறது. கடந்த திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.120 உயர்ந்த நிலையில், நேற்று மேலும் ரூ.560 உயர்ந்தது.

அதன் தொடர்ச்சியாக, இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.210 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,430-க்கு விற்பனையாகிறது. அதேபோல், சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,07,440 என்ற புதிய உச்சத்தை தொட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

தங்கத்தின் விலையைத் தொடர்ந்து, வெள்ளியின் விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, ரூ.2.45 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் இந்தத் தொடர் விலை உயர்வு நகைப்பிரியர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.