தமிழ்நாடு

நாளுக்கு நாள் ஏறும் தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.560 உயர்வு!

இன்று சென்னையில் தங்கம் வெள்ளி விலை உயர்ந்துள்ளது.

நாளுக்கு நாள் ஏறும் தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.560 உயர்வு!
தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த 18 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ 280 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,05,080 க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கிராமுக்கு ரூ 35 உயர்ந்து ஒரு கிராம் ரூ 13,135 க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் (19.07.2026) விடுமுறை நாள் என்பதால் தங்கம் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனையானது.

அதனைத் தொடர்ந்து வாரம் தொடக்க நாளான நேற்று (20.07.2026) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 120 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,05,200 க்கும், கிராமுக்கு ரூ 15 உயர்ந்து ஒரு கிராம் ரூ 13,150 க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் 2 வது நாளான இன்று தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 560 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,05,760 க்கும், கிராமுக்கு ரூ 70 உயர்ந்து ஒரு கிராம் ரூ 13,220 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலை போல வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ 5 அதிகரித்து ஒரு ரூ 240க்கும் , ஒரு கிலோ ரூ 2,40,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தொடர்ந்து இரு நாட்களாக தங்கம் விலை உயர்ந்து காணப்படுவதால் நகை வாங்குபவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.