கோவை பெரியார் நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு

கோவை பெரியார் நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு

கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Author: kazhugu k தமிழ்நாடு

கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட கோவை பெரியார் அறிவுலகப்பணிகள் முடிக்கப்பட்டு, முதலமைச்சர் விஜய் அண்மையில் திறந்து வைத்தார்.

இந்த நிலையில் நூலகங்களில் ஏஐ மூலம் தயாரிக்கப்பட்ட போலி புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளதாக, எழுத்தாளர் பெருமாள் முருகன் தெரிவித்த புகார் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை சுட்டிக்காட்டி, முதலமைச்சர் விஜய்யும் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் அடுத்தடுத்து புகார்கள் வெளியாகின.

கோவை பெரியார் அறிவுலகத்திற்கான நூலகத்திற்கு ஏஐ மூலம் நூல்கள் வாங்கப்பட்டது தெரிய வந்தது.

அகல் விளக்கு, பீனிக்ஸ், வீன்டேஜ் பதிப்பக புத்தகங்கள் பெருமளவு வாங்கப்பட்டது கண்டுப்பிடிக்கப்பட்டது.

இந்த முறைகேடு தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கடந்த திமுக அரசின் மீது தற்போதைய தவெக அரசு, கடும் குற்றச்சாட்டுகளை கூறிவருகிறது.

ஆனால், இதை திமுக தலைவர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். இந்த நிலையில் நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பாக நீதிமன்ற கடும் அதிருப்தியை தெரிவித்ததுடன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இந்த விவகாரம் வேகம் எடுத்தது. நூலகர்கள் உள்ளிட்ட 5 அதிகாரிகள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் தமிழகத்தில் உள்ள நூலகங்களில் சோதனை நடத்தப்பட்டத்தில் தமிழகம் முழுவதும் 7 கோடி ரூபாய் அளவிற்கு , 70 ஆயிரத்து 674 போலி நூல்கள் கடந்த ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்டது, கண்டுப்பிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மிக பிரபலமான எழுத்தாளர்களில் தொடங்கி, இதுவரை கேள்விப்படாத ஆசிரியர்களின் பெயரில் நூல்கள், கண்டுப்பிடிக்கப்பட்டது கல்வியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்தியது. சரியாக பிழைத்திருத்தம் செய்யப்படாமால், இருந்த பல போலி நூலகள் சிக்கின . ஏஐ தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நூல்கள் கண்டெடுக்கப்பட்டன.

இது தொடர்பாக அரசியல் தலைவர்களில் தொடங்கி, எழுத்தாளர்கள், பதிப்பகத்தார், சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பு மக்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். தொடர்ந்து நூலகங்களில் சோதனை நடத்தப்பட்டு போலி நூல்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கோவை பெரியார் அறிவுலக நூலகத்தில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். எந்ததெந்த நூல்கள், எந்த விலையில் வாங்கப்பட்டன என்ற விவரங்களை சேகரித்துள்ள அதிகாரிகள், அதன் அடிப்படையில் சோதனை மேற்கொண்டுள்ளனர். காலை 9 மணி அளவில் சோதனையை தொடங்கிய அதிகாரிகள், நூல்களின் தலைப்புகள், எழுத்தாளர்கள், பதிப்பகத்தார் பற்றிய விவரங்களை ஆராய்ந்து வருகின்றனர்.

இதனிடையே அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். மடிப்பாக்கத்தில் உள்ள மோகன் வீட்டில் சோதனை நடத்தி வரும் லஞ்ச ஒழிப்பு போலீசார், ஆதாரங்களின் அடிப்படையில் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்யது விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.