விளையாட்டு

FIFA: உலகக் கோப்பை கால்பந்து: இங்கிலாந்து- கானா ஆட்டம் டிரா; பனாமாவை வீழ்த்தி குரோஷியா வெற்றி!

இங்கிலாந்து - கானா அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்துள்ளது; மற்றொரு போட்டியில் பனாமா அணியை வீழ்த்தி குரோஷியா அபார வெற்றி பெற்றுள்ளது.

FIFA: உலகக் கோப்பை கால்பந்து: இங்கிலாந்து- கானா ஆட்டம் டிரா; பனாமாவை வீழ்த்தி குரோஷியா வெற்றி!
FIFA
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'எல்' பிரிவு லீக் ஆட்டங்களில், இங்கிலாந்து - கானா அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்துள்ளது; மற்றொரு போட்டியில் பனாமா அணியை வீழ்த்தி குரோஷியா அபார வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து - கானா ஆட்டம் டிரா!

போஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற 'எல்' பிரிவு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் கானா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிரமாக முயன்றனர். எனினும், இரு அணிகளின் பலத்த பாதுகாப்பு அரண் காரணமாக முதல் பாதி ஆட்டம் கோல் எதுவும் அடிக்கப்படாமல் சமநிலையில் முடிந்தது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியிலும் ஆட்டத்தின் இறுதி நிமிடம் வரை இரு அணி வீரர்களின் கோல் போடும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இதனால் ஆட்டம் டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டு இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. இதன் மூலம் 'எல்' பிரிவின் புள்ளிப் பட்டியலில் இங்கிலாந்து அணி முதலிடத்திலும், கானா அணி இரண்டாவது இடத்திலும் நீடிக்கின்றன.

பனாமாவை வீழ்த்தி குரோஷியா வெற்றி!

டொரண்டோ ஸ்டேடியத்தில் நடைபெற்ற இதே பிரிவின் மற்றொரு லீக் ஆட்டத்தில் குரோஷியா மற்றும் பனாமா அணிகள் மோதின. போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் 54-ஆவது நிமிடத்தில், குரோஷியா அணியின் நட்சத்திர வீரர் அந்தே புதிமிர் அபாரமாக ஒரு கோல் அடித்து தனது அணியை 1-0 என முன்னிலைப்படுத்தினார்.

இதன் பின்னர் ஆட்டத்தின் இறுதி வரையிலும், வழங்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் பனாமா அணியால் பதிலடி கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இறுதியில், பனாமா அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி குரோஷியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 'எல்' பிரிவு புள்ளிப் பட்டியலில் குரோஷியா 3-ஆவது இடத்திலும், பனாமா 4-ஆவது இடத்திலும் உள்ளன.