விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'சி' பிரிவு லீக் ஆட்டங்களில், மொராக்கோ மற்றும் பிரேசில் அணிகள் தங்களது ஆட்டங்களில் அதிரடி வெற்றி பெற்றுள்ளன.
மொராக்கோவின் அசாத்திய வெற்றி!
அட்லாண்டா ஸ்டேடியத்தில் நடைபெற்ற 'சி' பிரிவு லீக் ஆட்டத்தில் மொராக்கோ மற்றும் ஹைதி அணிகள் மோதின. ஆட்டத்தின் 10-ஆவது நிமிடத்திலேயே ஹைதி அணியின் யாசின் பவ்னவ் முதல் கோல் அடித்து தனது அணியை 1-0 என முன்னிலைப்படுத்தினார். தொடர்ந்து அதிரடி காட்டிய மொராக்கோ அணியின் அச்ரப் ஹகீமி 39-ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார். எனினும், 43-ஆவது நிமிடத்தில் ஹைதியின் வில்சன் இசிடோர் மற்றொரு கோல் அடிக்க, முதல் பாதியில் ஹைதி 2-1 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் ஆட்டம் மொராக்கோவின் வசம் முழுமையாக மாறியது. மொராக்கோ அணியின் இஸ்மாயில் சாய்பாரி 46-ஆவது நிமிடத்திலும், சவுபியான் ரகீமி 78-ஆவது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர். ஆட்டத்தின் இறுதிப்பகுதியான 89-ஆவது நிமிடத்தில் கெஸ்சிம் யாசின் மேலும் ஒரு கோல் அடிக்க, இறுதியில் மொராக்கோ அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஹைதியை வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்றது.
ஸ்காட்லாந்தை நிலைகுலையச் செய்த பிரேசில்!
மியாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற மற்றொரு விறுவிறுப்பான லீக் ஆட்டத்தில் பிரேசில் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டம் தொடங்கிய 7-ஆவது நிமிடத்திலேயே பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் வினிசியஸ் ஜூனியர் அதிரடியாக முதல் கோலை அடித்து அணியை 1-0 என முன்னிலைப்படுத்தினார். இதன் பின்னர் முதல் பாதியின் இறுதி வரை வேறு கோல்கள் அடிக்கப்படவில்லை.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியின் தொடக்கத்திலேயே (48-ஆவது நிமிடம்) வினிசியஸ் ஜூனியர் மீண்டும் ஒரு அபார கோல் அடித்து பிரேசிலை 2-0 என வலுவான நிலைக்குக் கொண்டு சென்றார். ஆட்டத்தின் 60-ஆவது நிமிடத்தில் மேத்யூஸ் குன்ஹா பிரேசில் அணிக்கான 3-ஆவது கோலை பதிவு செய்தார். அதன் பின்னர் ஸ்காட்லாந்து அணியால் பதிலடி கொடுக்க முடியாததால், பிரேசில் அணி 3-0 என்ற புள்ளி கணக்கில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

LIVE 24 X 7