விளையாட்டு

2027 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான்! 10வது அணியாக தகுதி பெற்றது!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு 10-வது அணியாக தகுதி பெற்றுள்ளது. நேற்று அயர்லாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியை வென்றதன் மூலம் உலகக்கோப்பைக்கான டிக்கெட் கிடைத்தது.

2027 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான்! 10வது அணியாக தகுதி பெற்றது!
Afghanista secures 10th place in 2027 world cup
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு 10-வது அணியாக தகுதி பெற்றுள்ளது. நேற்று அயர்லாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியை வென்றதன் மூலம் உலகக்கோப்பைக்கான டிக்கெட் கிடைத்தது.

அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து கடந்த 7-ம் தேதி நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது ஒருநாள் போட்டி பெல்பாஸ்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணியால் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த அயர்லாந்து, 46.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 206 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கும் தொடக்கம் எதிர்பார்த்தபடி அமையவில்லை. இருப்பினும் தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் பொறுப்புடன் விளையாடி 71 ரன்கள் சேர்த்தார்.

தொடர்ந்து ரஷித் கான் 43 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 44.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் எடுத்து, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2 - 0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் தொடரை கைப்பற்றியது.

இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் 2027-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்ற 10-வது அணியாகியுள்ளது. இதன் மூலம் உலகக் கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தானின் இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது.