தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதியுடன் 100 நாட்களை நிறைவடைந்த நிலையில், அவரது ஆட்சி குறித்த கருத்துகள் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டிருக்கின்றன.
பல ஆண்டுகளாக திமுக, அதிமுக என மாறி மாறி ஆட்சி நடைபெற்று வந்த சூழலை மாற்றி வரலாறு படைத்தார் முதலமைச்சர் விஜய் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில், அவரது ஆட்சி குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. ஒருபுறம் விஜயின் ஆட்சி குறித்து விமர்சனங்கள் எழுந்தாலும், மறுபுறம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக அவரது கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘டிராகன்’, ‘ஓ மை கடவுளே’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ‘தர்மன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் பட வேலைகள் குறித்து கேள்வி எழுப்பிய போது, பதிலளித்த அவர், “ஜெயிலர் 2 படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தர்மன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன் அந்தப் படத்தை தயாரிக்கிறார். நானும் கமல்ஹாசனும் ரெட் ஜெயன்ட் தயாரிக்கும் படத்தில் ஒன்றாக நடிக்க உள்ளோம்” என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து, “தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்து 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜயின் 100 நாள் ஆட்சி எப்படி உள்ளது?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்க மறுத்த ரஜினிகாந்த், “தேங்க் யூ... தேங்க் யூ...” என்று கூறிவிட்டு காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.
மேலும், திரையுலகில் உச்ச நட்சத்திரமாக உள்ள நடிகர் ரஜினிகாந்த், விஜய் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றும் விஜயின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை முன்வைத்தனர். அதேபோல், சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்திருந்தார். இந்தச் சந்திப்பு தொடர்பாகவும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு யூகங்கள் கிளப்பப்பட்டன.
இவ்வாறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், இதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “விஜய் வெற்றி பெற்ற உடனே எக்ஸ் தளத்தில் என்னுடைய வாழ்த்துகளைப் பதிவிட்டு விட்டேன். நான் அரசியலில் இல்லை. அரசியலில் இல்லாதபோது எனக்கு ஏன் பொறாமை வர வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “ஒருவேளை கமல்ஹாசன் முதலமைச்சராக இருந்தால் எனக்கு பொறாமை வந்திருக்குமா? தெரியாது. அப்போதுகூட பொறாமை வந்திருக்காது” என்று கூறி தனது விளக்கத்தை அளித்திருந்தார். மேலும் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதலளிக்காமல் சென்றது விஜயின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்து 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், இதுகுறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் மத்தியில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேநேரத்தில், ஊழல் ஒழிப்பில் விஜய் தீவிரம் காட்டி வருவதாகவும், விவசாயக் கடன்கள் ரூ.75 ஆயிரம் வரை தள்ளுபடி, 200 யூனிட் மின்சாரம் இலவசம் உள்ளிட்ட திட்டங்களை ஆட்சிக்கு வந்த 100 நாட்களிலேயே செயல்படுத்தியிருப்பதாகவும் தவெகவினர் கூறி வருகின்றனர்.

LIVE 24 X 7