தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழக ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது, தமிழகத்தில் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை அவர் ஆளுநரிடம் வழங்கினார். அவருடன் கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் உடனிருந்தனர்.
காங்கிரஸ் ஆதரவு மற்றும் கூட்டணி உறுதி
தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான ஆதரவைத் திரட்டும் வகையில், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விஜய்யைச் சந்தித்தனர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர், தங்களது 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்தை விஜய்யிடம் நேரில் வழங்கினர். இதன் மூலம் தமிழகத்தில் தவெக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது.
நாளை பதவியேற்பு: நேரு விளையாட்டு அரங்கில் விரிவான ஏற்பாடுகள்
ஆளுநரின் அழைப்பைத் தொடர்ந்து, நாளை (மே 7) தமிழக முதல்வராக விஜய் பதவியேற்க உள்ளார். இதற்கான பிரம்மாண்ட பதவியேற்பு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. விழாவுக்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்துத் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் ஏற்கனவே ஆலோசனைகளை நடத்தி முடித்துள்ளனர்.

LIVE 24 X 7