தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அ.தி.மு.க-வில் ஏற்பட்ட உட்கட்சிப் பிளவு, பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தற்போது சுமுக முடிவை எட்டி, இரு அணிகளும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எடப்பாடி பழனிசாமிக்கு (இ.பி.எஸ்) எதிராகச் செயல்பட்டு, ஆளும் தவெக அரசுக்கு ஆதரவளித்த எஸ்பி வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ-க்களை இ.பி.எஸ் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கியிருந்தார். இதனால் கட்சி இரண்டாகப் பிரிந்தது. இதற்கிடையே, வேலுமணிக்கு ஆதரவாக இருந்த ஆற்காடு எம்.எல்.ஏ சுகுமார், அந்தியூர் எம்.எல்.ஏ ஹரிபாஸ்கர் உட்பட 5 எம்.எல்.ஏ-க்கள் மீண்டும் இ.பி.எஸ் தரப்பிற்கு ஆதரவு தெரிவித்தனர்.
மேலும், வேலுமணி அணியில் இருந்த 4 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தது அந்த அணிக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில், அதிமுக ஐடி விங் பகிர்ந்துள்ள ஒரு பதிவு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ ஐடி விங் (IT Wing) தனது எக்ஸ் (X) பக்கத்தில், "எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும்" - அம்மா (மறைந்த முதல்வர் ஜெயலலிதா)
"கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது. இனி நமக்குள் பிரிவில்லை... இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை..
நம் இலக்கு ஒன்றுதான்... அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே! நாளை நமதே! தமிழ்நாடும் நமதே" என்று பதிவிட்டுள்ளது.
அதேபோல், சென்னையில் இன்று சி.வி.சண்முகத்தின் இல்லத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, "எல்லாம் முடிந்துவிட்டது; தாய், பிள்ளை எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கிறோம்" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாவிட்டாலும், அ.தி.மு.க-வின் மோதல் முடிவுக்கு வந்துவிட்டதாக எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LIVE 24 X 7