தமிழக முதலமைச்சரும் த.வெ.க தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையைச் செங்கல்பட்டு நீதிமன்றம் ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி, முதலமைச்சர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து மற்றும் நிரந்தர ஜீவனாம்சம் கோரி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, வழக்கு செங்கல்பட்டு முதலாவது குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த முக்கிய வழக்கு இன்று (ஜூன் 15) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இன்றைய விசாரணையின் போது, முதலமைச்சர் விஜய் மற்றும் சங்கீதா ஆகிய இருதரப்பு வழக்கறிஞர்களும், தங்களது கட்சிக்காரர்கள் ஆன்லைன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணைக்கு ஆஜராக அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். எனினும், உரிய ஆவணங்கள் இன்றி விடுக்கப்பட்ட இந்தக் கோரிக்கையைச் செங்கல்பட்டு நீதிமன்றம் அதிரடியாக நிராகரித்தது. மேலும், வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்த வேண்டுமானால், அதற்குரிய மின்னஞ்சல் முகவரி (E-mail ID) உள்ளிட்ட ஆவணங்களைச் முறையாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
விசாரணை ஒத்திவைப்பு
பிரபலங்கள் நீதிமன்றத்திற்கு நேரில் ஆஜராவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக வைக்கப்பட்ட இக்கோரிக்கை தற்காலிகமாக மறுக்கப்பட்ட சூழலில், வழக்கை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய நீதிமன்றம், இதன் இறுதி விசாரணையை வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

LIVE 24 X 7