சிவகாசியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, முதலமைச்சர் விஜய் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்துப் பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மு.க.ஸ்டாலின் குறித்த கருத்து
சிவகாசி கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி, முதலமைச்சர் பதவியில் இருக்கும் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்ணியக் குறைவாகப் பேசக்கூடாது என்று குறிப்பிட்டார். மேலும், "மு.க.ஸ்டாலினுக்கு எப்போது கோபம் வருகிறதோ, அப்போது தமிழகத்தில் தவெக ஆட்சி இருக்காது. அவருக்குக் கோபம் வர வேண்டும்; அது வரும். அதுவரைதான் உங்கள் ஆட்சி நீடிக்கும்" என்ற அவர், அண்மையில் கரூரில் முதலமைச்சர் விஜய் பேசிய விதத்தை மக்கள் ரசிக்கவில்லை என்றும், அது வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.
தவெக வெற்றி தற்காலிகமானது
தொடர்ந்து பேசிய அவர், தற்போது ஆட்சியில் உள்ள தவெக நேற்று முளைத்த காளான் போன்றது என்றும், அதனை அதிமுகவினர் ஊதித் தள்ளிவிடுவார்கள் என்றும் சாடினார். நடந்து முடிந்த தேர்தலில் தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத ஒருவர் தவெக சார்பில் போட்டியிட்டு வென்றுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மக்களுக்குச் செல்வாக்கு இருந்தால் தவெக 150 இடங்களில் வென்றிருக்க வேண்டும் என்றும், இந்த வெற்றி நிலையானது அல்ல என்றும் கூறினார்.
மத யானைக்கு நிகரான திமுகவையே அடக்கி ஆண்ட பாரம்பரியம் கொண்ட அதிமுகவைத் தூர்ந்து போன சக்தி என்று விஜய் விமர்சிப்பதை ஏற்க முடியாது என்று கூறிய ராஜேந்திர பாலாஜி, தவெகவின் ஆசைவார்த்தைகளை நம்பிச் சென்ற அதிமுகவினர் விரைவில் மீண்டும் தாய்க்கழகத்திற்கே திரும்புவார்கள் என்றும் தெரிவித்தார்.

LIVE 24 X 7